விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரிய ஹிட் அடித்த தொடர் ஈரமான ரோஜாவே.பவித்ரா ஜனனி,திரவியம் உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்த இந்த தொடர் 800 எபிசோடுகளை கடந்து பெரிய வெற்றி தொடராக உருவெடுத்தது.இதன் இரண்டாம் பாகம் சில மாதங்களுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பை தொடங்கியது.

2022 ஜனவரி 17 முதல் இந்த தொடர் ஒளிபரப்பை தொடங்கி வெற்றிகரமாக சென்று வருகிறது.ஈரமான ரோஜாவே 2-வில் ஹீரோவாக சித்தார்த்,திரவியம் ஹீரோவாக நடித்து வருகின்றனர்.ஸ்வாதி கொண்டே,கேப்ரியெல்லா கார்ல்டன் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் தீபக் குமார்,ஷ்ராவந்திகா,மனோகர்,ப்ரீத்தி குமார்,சாந்தினி பிரகாஷ்,சுனிதா என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.விறுவிறுப்பான கதைக்களத்துடன் இந்த தொடர் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரின் விறுவிறுப்பை கூட்டும் விதமாக தற்போது சில புது என்ட்ரிகள் இந்த தொடரில் இணைந்துள்ளனர்.ஈரமான ரோஜாவே சீசன் 1-ல் பிரபலமான பிரவீன் தேவசகாயம் இந்த தொடரில் தற்போது இணைந்துள்ளார்.இவரை தவிர இதயத்தை திருடாதே தொடரில் நடித்து வரும் சுகன்யா முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார்.இவர்கள் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

View this post on Instagram

A post shared by Suganya - Official (@suganyavish)