அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான படம் ஓ மை கடவுளே. பிரபல தொலைக்காட்சி நடிகை வாணி போஜனும் நடித்திருந்தார். அக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி இப்படத்தை தயாரித்தது. சமீபத்தில் திரைக்கு வந்த இப்படம் வெற்றி நடை போட்டது.
இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். விது அய்யனா ஒளிப்பதிவு செய்தார். U/A சான்றிதழ் வழங்கப்பட்ட இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை ஏ.பி.இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியது. சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியது.
தற்போது இப்படத்தை பார்த்த நடிகர் STR, படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார். தொலைபேசி வாயிலாக இயக்குனர் அஸ்வத்தை தொடர்பு கொண்ட STR, ஒரு மணி நேரம் படம் பற்றி பேசியுள்ளார். குறிப்பாக படத்தில் இடம்பெறும் TR மாதிரி தொடாமல் நடிப்பேன் என்ற வசனத்தை சுட்டிக்காட்டி பாராட்டினாராம். மேலும் ஹீரோ அசோக் செல்வன் மற்றும் ஷாராவின் நடிப்பு நன்றாக இருந்ததென கூறியுள்ளாராம்.