திரையுலகின் இயக்குனர் இமயமாய் விளங்குபவர் பாரதிராஜா. இவர் நடித்து இயக்கும் திரைப்படம் மீண்டும் ஒரு மரியாதை. பிப்ரவரி 21-ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. வயதான முதியருக்கும் இளம்பெண்னுக்கும் இடையிலான கதையான இதில் நட்சத்திரா, ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு முதலில் ஓம் (ஓல்டுமேன்) எனப் பெயரிடப்பட்டிருந்தது. முதல் மரியாதை படத்தை நினைவுப் படுத்தும் விதமாக மீண்டும் ஒரு மரியாதை என மாற்றப்பட்டுள்ளது. NR ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சபேஷ் முரளி பின்னணி இசை பணிகளை செய்துள்ளார்.
படத்தின் ட்ரைலர், பாடல் வீடியோ மற்றும் ஸ்னீக் பீக் காட்சி சமீபத்தில் வெளியானது. தற்போது இப்படத்தை பார்த்த நடிகர் STR படம் குறித்து பாராட்டி பேசியுள்ளார். குறிப்பாக ஹீரோயினின் நடிப்பு நன்றாக இருந்தது என கூறி வாழ்த்தியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு திரைப்படத்தில் சிம்புவுடன் முக்கிய ரோலில் நடிக்கிறார் பாரதிராஜா.
Thanku so much😍#Simbhu #momfromfeb21 Tomorrow on wards @sureshkamatchi @onlynikil pic.twitter.com/4Hvuig8GyV
— Bharathiraja (@offBharathiraja) February 20, 2020