தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் செயின்ட் பிரிட்டோ அகாடமி என் செயலாளர் மதிப்பிற்குரிய Dr.விமலா ராணி அவர்கள் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்களின் மனைவி. இயக்குனரும் தளபதி விஜய்யின் தந்தையுமான S.A.சந்திரசேகர் அவர்களின் தங்கை மகளான Dr.விமலா ராணி அவர்கள், தனது தரமான கல்வி சேவையோடு வழி நடத்தும் செயிண்ட் பிரிட்டோ அகாடமி தற்போது 25 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்திருக்கிறது. சிறந்த கல்வியாளராக மட்டுமல்லாமல் சிறந்த சமூக ஆர்வலராகவும் விளங்கும் டாக்டர். விமலா ராணி அவர்கள் தன்னுடைய சீக் பவுண்டேஷன் சார்பில் பல சமூக நல பணிகளை செய்து கொண்டிருக்கிறார். குறிப்பாக 25 கிராமங்களை தத்தெடுத்து அந்த கிராமங்களுக்கு ஆண்டுதோறும் இரண்டு கோடி ரூபாய் வரை செலவு செய்து அந்த கிராமங்களுக்கான அடிப்படை வசதி குழந்தைகளுக்கான கல்வி மருத்துவ உதவிகள் பெண்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் என பலதரப்பட்ட நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேகமாக பேட்டி கொடுத்த டாக்டர்.விமலா ராணி அவர்கள் தன்னுடைய இந்த சாதனை பயணத்தின் மறக்க முடியாத அனுபவங்கள் குறித்தும் தன்னுடைய செயிண்ட் பிரிட்டோ அகாடமியின் சிறப்பம்சங்கள் மற்றும் சாதனைகள் குறித்தும் நம்மோடு விவரமாக பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் தன்னுடைய சொந்த வீடு குறித்து பேசியபோது,

“வாடகை வீட்டில் இருக்கும் போது ஒரு சொந்த வீட்டிற்கு கூடுதலாக ஒரு 50 ஆயிரம் ரூபாய் என்ற விஷயத்தில் எனக்கும் என் கணவருக்கும் அவ்வளவு பெரிய வாக்குவாதங்கள் நடந்தது. அவர் என்னிடம், “நான் உன்னை இந்த விலைக்கு தானே பார்க்க சொன்னேன் இந்த 50 ஆயிரம் ரூபாய்க்கு நான் என்ன செய்வது” என கேட்க, அப்படி இருந்த ஒரு இடத்தில் இருந்து இப்போது இப்படி ஒரு லக்ஸரியான வீடு. நான் சொந்த வீட்டிலேயே பிறந்து வளர்ந்து வந்த ஒரு ஆள் எனக்கு கல்யாணம் ஆகி வந்த உடனேயே எப்படியாவது காசு சேர்த்து ஒரு சொந்த வீடு வாங்கி விட வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருந்தது. எல்லோருக்குமே அப்படி இருக்கும். சொந்த வீட்டில் இருந்து வந்தவர்கள், வாடகை வீட்டில் இருக்கும் போது அந்த ஒரு உணர்வு இருக்கும். எனவே எப்படியாவது கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஒரு வீடு வாங்கி விட வேண்டும் என இருந்தது. அடையாறில் தான் முதல் வீடு வாங்கினேன். அந்த வீட்டை தான் விஜய் அவர்களின் குடும்பத்தினர் எங்களிடமிருந்து அவருக்காக வாங்கினார்கள். ஏனென்றால் அந்த வீடு வந்ததிலிருந்து தான் எங்களுடைய வளர்ச்சி மிகவும் நன்றாக இருந்தது. எனவே அந்த வீடு எங்கள் விஜய்க்கு கொடுங்கள் என கேட்டதால் நாங்கள் கொடுத்தோம். விஜயும் சங்கீதாவும் திருமணம் முடிந்து அங்கு தான் வந்தார்கள். இப்போது அதே வீட்டில் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களும் சோபா சந்திரசேகர் அவர்களும் வசிக்கிறார்கள்.” என தெரிவித்துள்ளார் இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்ட டாக்டர் விமலா ராணி அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.