தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பக்கா ஆக்சன் ட்ரீட்டாகவும் VISHUAL ட்ரீட்டாகவும் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளிவந்த லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு தளபதி விஜய் - திரிஷா ஜோடி தற்போது லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கிறது. மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.மனோஜ் பரமஹம்சா அவர்களின் அட்டகாசமான ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கும் லியோ திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார்.
CG உதவியுடன் மிரளவைக்கும் கழுதைப்புலி உடனான ஆக்ஷன் காட்சி மிகவும் தத்ரூபமாக இருப்பதாக ரசிகர்கள் அனைவரும் அந்த காட்சியை புகழ்ந்து வருகின்றனர் அதே போல் மற்றொரு முக்கியமான ஒரு சேசிங் காட்சியும் மிகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தளபதி விஜய் அவர்களின் திரைப் பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக வந்திருக்கும் இந்த லியோ திரைப்படம், உலக அளவில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றதோடு முதல் நாளிலேயே 148 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மிகப் பெரிய சாதனையையும் படைத்தது. இது ஒரு புறம் இருக்க லியோ திரைப்படம் வெளியானதில் இருந்து சில எதிர்மறையான விமர்சனங்களும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு பரத்வாஜ் ரங்கன் அவர்களுடனான சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட லியோ படத்தின் தயாரிப்பாளர் SS.லலித் குமார் அவர்கள் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், லியோ திரைப் படத்திற்கான விமர்சனங்கள் கொஞ்சம் கலவையான விமர்சனங்களாக வந்திருக்கிறது. அதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன? எனக் கேட்டபோது, “எனக்கு தெரிந்து CRITICS விமர்சனங்கள் முதல் நாளில் இருந்தது. ஆனால் ரசிகர்களுக்கு கண்டிப்பாக படம் பிடிக்கும். இது மாதிரி நாங்கள் எதிர்பார்க்கவில்லை. முதல் பாதி ரொம்ப நன்றாக இருந்தது என்று நான் கூட இரண்டு இடங்களில் சொல்லி இருந்தேன் அது எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என சொல்லி இருந்தேன். அதே தான் சரியாக விமர்சனத்திலும் வந்தது. ஆனால் இரண்டாவது பாதியில் ஒரு பத்து நிமிடம் தொய்வு இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் ரசிகர்களுக்கு பொறுத்த வரை அது போய்விடும். கடைசி 40 நிமிடங்கள் படமாக அவர்களுக்கு நன்றாய் நின்று விடும்.” என பதில் அளித்துள்ளார் இன்னும் சில முக்கிய கேள்விகளுக்கு சுவாரசியமாக பதில் அளித்தால் தயாரிப்பாளர்களை லலித் குமார் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள காணலாம்.