தமிழ் சினிமாவில் இதுவரை முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் சூரி இதற்கு மேல் தேர்ந்த நடிகர் என சொல்லும் அளவிற்கு விடுதலை திரைப்படத்தில் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். முதல் முறையாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதை நாயகனாக நடித்த விடுதலை திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் நாவலை தழுவி இரண்டு பாகங்களாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த விடுதலை திரைப்படத்தை RS இன்போடைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் நிறுவனம் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட கடந்த மார்ச் 31ஆம் தேதி விடுதலை பாகம் 1 உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் வெற்றிமாறனின் அடுத்த ஆகச் சிறந்த படைப்பாக விடுதலை திரைப்படம் வெளிவந்துள்ளது.

படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் மக்களின் மனதை மிகவும் ஆழமாக பாதித்துள்ளன. எப்படிப்பட்ட சமூகத்தில் நாம் இருக்கிறோம் என்று ஒவ்வொருவரையும் அவர்களுக்குள்ளே கேள்வி கேட்க வைக்கும் வகையில் மேலும் ஒரு அழுத்தமான படைப்பை கொடுத்திருக்கும் இயக்குனர் வெற்றிமாறனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. R.வேல்ராஜின் ஒளிப்பதிவில் உருவான இந்த விடுதலை திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது நாள் வரையில் நகைச்சுவை நடிகராக தனக்கென தனி பாணியில் கலக்கி வந்த நடிகர் சூரி அதிலிருந்து முற்றிலுமாக வேறுபட்டு குமரேசன் எனும் கதாபாத்திரத்தில் மிகப் பொருத்தமாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற சிறப்பு சூரி ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சூரி ரசிகர்களோடு கலந்துரையாடியதோடு பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் இந்த ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் திடீரென சர்ப்ரைஸாக நடிகர் சூரியின் பள்ளிக்கூட வாத்தியார் மதிப்பிற்குரிய தமிழரசன் ஐயா அவர்கள் கலந்து கொண்டார். அரங்கத்திற்குள் நுழையும் போதே சூரியின் இயற்பெயரான ராமசாமி என்ற பெயரை சொல்லி அழைத்தபடியே உள்ளே நுழைந்த தமிழரசன் ஐயாவை பார்த்தவுடன் எழுந்து நின்ற சூரி அவரது காலை தொட்டு வணங்கினார். இதனைத் தொடர்ந்து நகர்ந்த அடுத்த ஒவ்வொரு நிமிடங்களும் அரங்கை கரகோஷங்களாலும் சிரிப்பொலியாலும் அதிர வைத்தன என்று தான் சொல்ல வேண்டும். பள்ளிப் பருவத்தில் சூரி செய்த சேட்டைகள் அட்டகாசங்கள் ஒவ்வொன்றையும் அடுக்கடுக்காக அடுக்கிய வாத்தியார் தமிழரசன் ஐயா தொடர்ந்து சூரியை நினைத்து மிகவும் பெருமை கொள்வதாக நெகிழ்ந்து பேசினார். ஒவ்வொரு முறை சூரியை பற்றி தமிழரசன் ஐயா பேசிய போதும் சூரியன் குனிந்து அவரது காலை தொட்டு வழங்கிக் கொண்டே இருந்தார். பின்னர் நிஜத்தில் பள்ளிக்கூடத்தில் பாடம் எடுப்பது போலவே திருக்குறளில் இருந்து
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்”

எனும் குறளை எடுத்து விளக்கி பொருள் கூறிய தமிழரசன் ஐயா அவர்கள் நிஜத்தில் பள்ளிக்கூடத்தில் சேட்டை செய்யும் சூரியை அடிப்பது போலவே அவரது தோளில் அடித்து காதை திருகினார். அதுமட்டுமல்லாது பள்ளிப்பருவத்தில் பாடம் நடத்தும் சமயங்களில் சூரி எந்த மாதிரியான துணியில் பேசுவார் எப்படியாக நடந்து செல்வார் என்பதை கூட தத்துரூபமாக தமிழரசன் அய்யா அவர்கள் செய்து காண்பித்தார். தனது பள்ளிக்கூட வாத்தியார் தமிழரசன் ஐயா அவர்களின் இந்த செயலால் மனம் நெகிழ்ந்த சூரி ஆனந்தத்தில் கண் கலங்கினார். ரசிகர்கள் கொண்டாட்டத்தில் சர்ப்ரைஸாக வருகை தந்த சூரியன் பள்ளிக்கூட வாத்தியார் தமிழரசன் ஐயா அவர்கள் கலந்து கொண்ட இந்த சிறப்பு நிகழ்வின் கலக்கலான வீடியோ இதோ…