இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படைப்பான பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஆல் டைம் ரெகார்டாக பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி அவர்களின் அற்புதப் படைப்பான பொன்னியின் செல்வன் எனும் வரலாற்று புனைவு நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம், எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் அவர்களின் திரைக்கதையில் பிரம்மாண்ட படைப்பாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன.

உலகெங்கும் பல கோடி ரசிகர்களின் மனதை வென்ற பொன்னியின் செல்வன் நாவலின் முக்கிய கதாபாத்திரங்களாக விளங்கும் ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி ரெட் ஜாயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சோபிதா துலிபலா நமது கலாட்டா சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்துள்ளார். இந்த பேட்டியில் பொன்னியின் செல்வனில் வானதி கதாபாத்திரம் அதிகம் இடம்பெறாமல் இருப்பதற்கு காரணம் என்ன? என்று கேட்டபோது,


“ஏற்கனவே ஐந்து புத்தகங்களை இரண்டு திரைப்படமாக மாற்றுவது மிகவும் கடினமானது. சில நேரங்களில் சில கதாபாத்திரங்களுக்கான வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பம் என நினைக்கிறேன். எனவே இந்த இடத்தில் நான் எனக்கு மட்டும் என யோசிக்க முடியாது. மாறாக திரைப்படத்தை நல்ல முறையில் வரவேற்க வேண்டும். நான் மணிரத்னம் அவர்களின் பார்வையையும் தேர்வுகளையும் மதிக்கிறேன்.” என பதில் அளித்துள்ளார். இன்னும் சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட சோபிதாவின் முழு பேட்டி இதோ…