தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால். அட்டகாசமான கதைகளத்தை தேர்ந்தெடுத்து குடும்பங்கள் கொண்டாடும் பக்கா கமர்ஷியல் படங்களை கொடுத்து தர்போதுப் தமிழில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது இவர் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தினை இயக்கியும் தயாரித்தும் நடித்தும் வருகிறார். முன்னதாக இவர் நடிப்பில் வெளியான லத்தி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நடிகர் விஷால் நடித்து பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. யக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தில் மார்க் ஆண்டனியாக விஷால் நடிக்க ஜாக்கி பாண்டியன் என்ற மிக முக்கியமான கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பிரபல தெலுங்கு நடிகர் சுனில், இயக்குனர் செல்வராகவன், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா மற்றும் மலேசிய நடிகர் DSG உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
மினி ஸ்டுடியோ வினோத்குமார் தயாரிப்பில் 60களின் கதை களத்தை மையமாக கொண்டு கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார் மேலும் படத்திற்கு ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்கிறார்.
விண்டேஜ் லுக்கில் அட்டகாசமான நடிகர்களின் லுக் முன்னதாக வெளியான தருனத்திளிருந்தே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதனை தொடர்ந்து இப்படத்தின் மோஷன் போஸ்டர் வித்யாசமான உணர்வை ரசியக்ர்களுக்கு கொடுத்து எதிர்பார்ப்பை அதிகரித்தது. மேலும் படம் டைம் டிராவல் சார்ந்து இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் தனது பங்கை முடித்துள்ளார் நடிகர் எஸ் ஜே சூர்யா. இது தொடர்பாக படக்குழு எஸ் ஜே சூர்யாவிருக்கு துப்பாக்கி குண்டு முழங்க கேக் வெட்டி பாராட்டி நன்றி தெரிவித்த வீடியோவினை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்து நடிகர் எஸ் ஜே சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் அதனை பகிர்ந்து “அற்புதமான படப்பிடிப்பு . இதில் நான் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்கிறேன். நன்றி புரட்சி தளபதி” என்று குறிப்பிட்டுள்ளார்.
Wonderful shooting 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 I am very happy about the project 👍👍👍thx to Our Puratchi Thalapathy @VishalKOfficial sir 💐@Adhikravi sir 💐@gvprakashsir 💐 @selvaraghavan sir💐 @ministudiosllp Vinod sir 💐 dop Abinandan sir & entire team 💐💐💐💐💐💐💐💐💐💐🙏 https://t.co/goyZj62jYM
— S J Suryah (@iam_SJSuryah) April 17, 2023