கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் தினமும் அதிகரித்து வருகிறது.இதனை அடுத்து நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு மக்கள் பத்திரமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இருந்தாலும் நோயின் தாக்கம் குறைந்ததாக இல்லை.உலகத்தையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் தாக்கம் எப்போது குறையும் என்று மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன.சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் மூன்று மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன.சினிமா,சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.சில இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டன,ஷூட்டிங்குகள் ஆரம்பித்தன.

மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருப்பதாலும்,ஷூட்டிங்குகள் நடைபெறாததாலும் ஹிட்டான தொடர்களையும்,படங்களையும் டிவி சேனல்கள் போட்டி போட்டு ஒளிபரப்பி வருகின்றனர்.தற்போது ஒளிபரப்பாகி வந்த விறுவிறுப்பான தொடர்களையும் முதலில் இருந்து ஒளிபரப்பி வருகின்றனர்.பலரும் இந்த தொடர்களையும்,நிகழ்ச்சிகளையும்,படங்களையும் பார்த்து வருகின்றனர்.மூன்று மாதங்களுக்கு பிறகு ஷூட்டிங்குகள் தொடங்கி தற்போது சீரியல்களின் புதிய எபிசோடுகள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன.இருந்தாலும் பலரும் வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதால் சீரியல்களோடு சேர்ந்து மக்கள் ரசிக்கும்படியான நிகழ்ச்சிகளையும்,படங்களையும் ஒளிபரப்பி வருகின்றனர்.

அதிகம் மக்களால் பார்க்கப்பட்ட தொடர்கள் மற்றும் படங்களின் லிஸ்டை BARC நிறுவனம் வாராவாரம் வெளியிட்டு வந்தனர்.கடந்த வாரத்திற்கான லிஸ்டை BARC தற்போது வெளியிட்டுள்ளது.சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் 1.077 கோடி பார்வையாளர்களை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது,91.06 லட்சம் பார்வையாளர்களுடன் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரும் மூன்றாவது இடத்தை 76.78 லட்சம் பார்வையாளர்களுடன் சன் டிவியின் ரோஜா தொடரும் பிடித்துள்ளன.இவற்றை தொடர்ந்து விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 72.69 பார்வையாளர்கள் மற்றும் சனிக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பான விஜயின் போக்கிரி படம் 65.43 பார்வையாளர்களை பெற்று நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில உள்ளன.நம்ம வீட்டு பிள்ளை படம் ஒளிபரப்பட்ட மூன்று தடவையும் 1 கோடி பார்வையாளர்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளது.