கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்று தற்போது தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் ஹீரோவாக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் தனக்கே உரித்தான பாதையில் தொகுப்பாளராக மக்களின் மனதை வென்று வெள்ளித்திரையில் கதாநாயகனாக வெற்றி கொடி நாட்டியுள்ள சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் திரையுலகின் இன்றியமையாத கதாநாயகனாக வலம் வருகிறார். மெரினா படத்தில் மூலம் கதாநாயகனாக களமிறங்கி மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்த சிவகார்த்திகேயன் தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினிமுருகன், ரெமோ என வரிசையாக சூப்பர் ஹிட் திரைப்படங்களால் ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவந்த வேலைக்காரன், சீம ராஜா, Mr.லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிலான மிகப்பெரிய வெற்றியை பெற தவறிய போதும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்து மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆனது. டாக்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலித்தது. கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது.

அடுத்ததாக, இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் ரவிசங்கர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக தயாராகி இருக்கும் அயலான் திரைப்படத்தின் VFX பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் அயலான் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். மேலும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் SK24 திரைப்படத்தில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இதனிடையே மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, இயக்குனர் மிஷ்கின், பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் மாவீரன் படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்கிறார். மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீசீசில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாவீரன் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புதிய வீடியோ தற்போது வெளியானது. அந்த வீடியோ இதோ…