ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் சிவகார்த்திகேயனின் ஏலியன் சயின்ஸ் பிக்சன் படமான அயலான் திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று தற்போது மக்களின் மனம் கவர்ந்த நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு தற்போது உலகநாயகன் கமஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீரில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படமாக உருவாகும் SK23 படத்தில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார்.
இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமான ஏலியன் சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படமாக தயாராகி வருகிறது அயலான் திரைப்படம். இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ள அயலான் திரைப்படத்தில், இஷா கோபிகர், சரத் கேல்கர், பானுப்பிரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அயலான் திரைப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு அயலான் படத்தின் முதல் பாடலாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பாடி வெளிவந்த வேற லெவல் சகோ பாடல் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத அட்டகாசமான ஏலியன் திரைப்படமாக தயாராகி வரும் அயலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட VFX பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக அயலான் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இறுதி கட்டப் பணிகள் இன்னும் முழுவதும் நிறைவடையாததால் தரமான படைப்பாக அயலான் படத்தை வழங்க முடிவு செய்த படக்குழுவினர் 2023 தீபாவளி வெளியீடாக வெளிவர இருந்த சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் அடுத்த 2024 ஆம் ஆண்டில் பொங்கல் வெளியீடாக ரிலீஸ் ஆகும் என தெரிவித்தனர். மேலும் பொங்கல் விருந்தாக வர இருக்கும் அயலான் திரைப்படத்தின் டீசர் அக்டோபர் முதல் வாரத்தில் வர இருப்பதாகவும் அறிவித்து ரசிகர்களுக்கு செம அப்டேட் கொடுத்தனர்.
அந்த வகையில் தற்போது அயலான் திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் வருகிற அக்டோபர் 6ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக பட குழுவினர் அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் கலக்கலான புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தில் கீபோர்ட் முன்பு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அமர்ந்திருக்க அவர் அருகில் படத்தில் இருக்கும் ஏலியன் அமர்ந்து இருக்கிறது. பின்னால் சிவகார்த்திகேயனும் இயக்குனர் R.ரவிக்குமார் அவர்களும் நிற்கிறார்கள். இந்த கலக்கலான புகைப்படம் தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது அந்த புகைப்படம் & டீசர் ரிலீஸ் அறிவிப்பு இதோ…