தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன்.டாக்டர்,அயலா
நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்டர் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.யோகி பாபு,வினய்,டோனி,ஜாரா அர்ச்சனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
நானி நடித்த கேங் லீடர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா மோகன்.இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மார்ச் மாதம் வெளியாக இருந்த படம் கொரோனா காரணமாக தள்ளிப்போனது.
இந்த படம் நேரடியாக OTT-யில் வெளியாக போகிறது என்ற தகவலும் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.தற்போது படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான சோ பேபி பாடலை பாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.கொஞ்சம் வித்தியாசமாக உள்ள இந்த வெர்ஷனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது