ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் அனுஷ்கா நடித்துள்ள திரைப்படம் சைலன்ஸ். இப்படத்தில் அனுஷ்காவுடன் நடிகர் மாதவன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ரெண்டு படத்திற்கு பிறகு இந்த படத்தில் தான் அனுஷ்கா மற்றும் மாதவன் இணைந்து நடித்துள்ளனர்.

கோனா பிலிம்கார்ப்பரேஷனுடன் இணைந்து பீப்பிள் மீடியா கார்ப்ரேஷன் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் அனுஷ்கா ஷெட்டி, ஆர். மாதவன் மற்றும் அஞ்சலி ஆகியோர் ஷாலினி பாண்டே, சுப்பராஜு மற்றும் ஸ்ரீனிவாஸ் அவசரலா ஆகியோருடன் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மைக்கேல் மேட்சனுக்கு இந்திய சினிமாவில் இதுமுதல் படமாக அமையும். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கிறது இப்படம்.

காது கேட்காத மற்றும் வாய்பேசமுடியாத திறைமையான கலைஞரான சாக்ஷி, எதிர்பாராத விதமாக பேய் இருப்பதாக நம்பப்படும் வில்லாவில் நிகழும் மோசமான சம்பவத்தை பார்த்ததால் அதன் குற்றவியல் விசாரணையில் சிக்கிக் கொள்கிறாள். அக்டோபர் 2-ம் ஆண்டு உலகளவில் அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது. சூரரைப் போற்று, க.பெ. ரணசிங்கம் போன்ற படங்களை தொடர்ந்து இந்த படமும் அமேசான் தளத்தில் வெளியாகிறது.

துப்பறியும் போலிஸ் குழுவினர் இந்த வழக்கை முழுவதுமாக ஆராய்ந்து காணாமல் போன இளம்பெண் வரையிலான சந்தேக நபர்களின் பட்டியலை தாயார் செய்கின்றனர். கடைசி வரை யூகிக்க முடியாத ஒரு உங்களை இருக்கையின் நுணிக்கே வரைவழைக்கும் ஒரு த்ரில்லர் படமாக சைலன்ஸ் இருக்கும்.

தயாரிப்பு நிறுவனம் இந்த படம் பற்றி பேசும் போது, படத்தின் ட்ரெய்லருக்கு கிடைத்த பெரும் வரவேற்பால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். படம் பார்க்கும் முறை மாறிவிட்டது. மேலும் பிராந்திய பார்வையாளர்களை அதிகரிப்பதற்காக, நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் முதல் மும்மொழி திரைப்படம் நிசப்தம். இது நாட்டின் தொலைதூர நகரங்களில் உள்ள ஒவ்வொரு நபரையும் வளர்ச்சியடைந்ததாக உணரவைக்கும் என்று தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர். மேலும் இதை பிரதான சினிமா தளங்களின் ஒரு பகுதியாகவும் அவர்கள் பார்க்கிறார்கள். மிகப்பெரிய வாய்ப்புகளுக்காகவும், வெளியீட்டுக்காகவும் நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம்’ என்றனர்.

கடைசியாக படத்திலிருந்து ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியானது. அதில் நடிகை அஞ்சலி காவல் அதிகாரியாக தோன்றியுள்ளார். அனுஷ்காவிடம் கேள்வி மீது கேள்வி கேட்டு விசாரனை செய்தது போல் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் படத்திலிருந்து நீயே நீயே பாடல் வீடியோ வெளியானது. கோபி சுந்தர் இசையமைத்த இந்த பாடலை ஆலப் ராஜு பாடியுள்ளார். கருணா இந்த பாடல் வரிகளை எழுதியுள்ளார்.