தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிலம்பரசன் TR.சிறு வயதில் இருந்தே நடிக்கும் இவருக்கு எந்த அளவு புகழ் வந்ததோ அந்த அளவு பல சர்ச்சைகளையும் கடந்து வந்துள்ளார் சிம்பு.என பிரச்சனைகள் வந்தாலும் இவரது ரசிகர்கள் இவரை விட்டுக்கொடுத்ததில்லைஇவரது ட்ரான்ஸ்பரமேஷனை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.
இவர் நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை அடுத்து பத்துதல,கொரோனா குமார் படங்களில் நடித்து வருகிறார்.வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தினை கெளதம் மேனன் இயக்குகியுள்ளார்.
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.சித்தி இத்நானி இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.நீரஜ் மாதவ்,ராதிகா உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளனர்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது.
இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான காலத்துக்கும் நீ வேணும் என்ற பாடல் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.செம ரொமான்டிக் ஆன இந்த பாடல் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்