தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிலம்பரசன் அடுத்ததாக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து வருகிறார். நடிகர் கௌதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பத்து தல படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தொடர்ந்து இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகும் கொரோனா குமார் திரைப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர் சிலம்பரசன்.TR, முன்னதாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்து வந்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு முற்றிலும் நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி இருக்கும் தி வாரியர் படத்தில் நடிகர் சிலம்பரசன்.T.R இணைந்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடித்திருக்கும் தி வாரியர் திரைப்படத்தில் நடிகர் ஆதி மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ள தி வாரியர் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள தி வாரியர் திரைப்படம் வருகிற ஜூலை 14ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் லிங்குசாமியின் தி வாரியர் படத்திற்காக ஒரு பாடலை நடிகர் சிலம்பரசன்.T.R பாடியுள்ளார் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்பாடல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

It’s #STRforRAPO 🎼!

Stay tuned for something mind blowing coming your way#TheWarriorr ⚔️@ramsayz @SilambarasanTR_ @AadhiOfficial @dirlingusamy @iamkrithishetty @srinivasaaoffl @iAksharaGowda @ThisIsDSP @sujithvasudev @anbariv @adityamusic @masterpieceoffl pic.twitter.com/pqgzWQTtlk

— Nikil Murukan (@onlynikil) April 17, 2022