தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிலம்பரசன் TR.சிறு வயதில் இருந்தே நடிக்கும் இவருக்கு எந்த அளவு புகழ் வந்ததோ அந்த அளவு பல சர்ச்சைகளையும் கடந்து வந்துள்ளார் சிம்பு.என பிரச்சனைகள் வந்தாலும் இவரது ரசிகர்கள் இவரை விட்டுக்கொடுத்ததில்லை.
உடல் பருமனாக கடந்த சில வருடங்களாக இருந்து வந்த STR அல்டிமேட்டாக ட்ரான்ஸ்பார்ம் ஆகி பழைய நிலைக்கு திரும்பினார்.இவரது ட்ரான்ஸ்பரமேஷனை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.இதனை அடுத்து பத்துதல,வெந்து தணிந்தது காடு படங்களில் நடித்து வருகிறார்.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கவும் கடந்த வாரம் இணைந்தார் சிலம்பரசன் TR.தொகுப்பாளராகவும் முதல் வராத்திலேயே பட்டையை கிளப்பி பலரது பாராட்டுகளையும் பெற்றார் சிம்பு.
தமிழ் சினிமாவின் மாஸ் நாயகன் மட்டுமல்லாமல் பல பெண்களின் கனவுகண்ணனாகவும் திகழ்ந்து வருகிறார் சிம்பு.இவரது திருமணம் எப்போது என்று பலரும் கடந்த சில வருடங்களாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.இந்த நிகழ்ச்சியில் இவர் தொகுத்து வழங்கி வருகையில் பாலா சிம்புவிடம் எப்போது உங்கள் கல்யாணம் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சிலம்பரசன் நான் ரெடி தான்,என்னை கல்யாணம் பண்ண யாரும் ரெடியா இல்லன்னு செம ஜாலியாக பதிலளித்துள்ளார்.இவரது இந்த பதில் ரசிகர்களிடம் செம வைரலாகி வருகிறது.சிம்பு ரெடி என சொன்னதை வைத்து பார்த்தால் வெகு விரைவில் செய்தியை எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது.
Our Thalaivan @SilambarasanTR_ About Marriage ❤😇😂#SilambarasanTR #PathuThala#VendhuThanindhathuKaadu https://t.co/KEDrcBIdNi pic.twitter.com/FlWm7Wlh9p
— Str Sankar (@StrSankar2) February 28, 2022