தமிழ் சினிமாவின் நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன்.TR நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்ப்படம் வெந்து தணிந்தது காடு. தனது உடல் எடையை வெகுவாக குறைத்து யாரும் எதிர்பாராத வகையில் அசாத்தியமான புதிய லுக்கில் அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கிய சிலம்பரசன்.TR முத்து கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து மக்களின் மனதை கொள்ளையடித்தார். முன்னதாக தனது மாநாடு திரைப்படத்திலிருந்து புதிய வெற்றி பயணத்தை தொடங்கி இருக்கும் சிலம்பரசன்.TR வெந்து தணிந்தது காடு பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு அடுத்த திரைப்படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில் நடிகர் சிலம்பரசன்.TR திரைப் பயணத்தில் 48வது திரைப்படமாக STR48 திரைப்படத்தில் அடுத்து நடிக்கிறார். இந்த STR48 திரைப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி எழுதி இயக்குகிறார்.
முன்னதாக ஸ்டூடியோ கிரீன் சார்பில் KE.ஞானவேல் ராஜா அவர்களின் தயாரிப்பில் சிலம்பரசன் நடித்துள்ள பத்து தல திரைப்படம் பென் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட வருகிற மார்ச் 30 ஆம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக தமிழில் தயாராகி இருக்கும் பத்து தல திரைப்படத்தில் கன்னடத்தில் சிவராஜ் குமார் நடித்த வேடத்தின் தமிழ் வெர்ஷனாக AG.ராவணன் எனும் AGR கதாபாத்திரத்தில் சிலம்பரசன்.TR நடித்துள்ளார். சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை திரைப்படங்களின் இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR உடன் இணைந்து கௌதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பத்து தல திரைப்படத்தில், பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பத்து தல படத்திற்கு ஃபரூக்.J.பாஷா ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மார்ச் 18ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
நடிகர் சிலம்பரசன்.TR திரை பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவாக பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிலம்பரசன்.TR பேசியபோது ரசிகர்களின் ஆரவாரத்தால் அரங்கமே அதிர்ந்தது. ரசிகர்களை குறிப்பிட்டு அதிகமாக சிலம்பரசன் பேசினார் என்று தான் சொல்ல வேண்டும் தன்னுடைய கடினமான காலகட்டத்தில் உடன் இருந்த குறிப்பிட்டு மிகவும் உணர்ச்சியோடு பேசினார். அந்த வகையில் பேசும் போது, பத்து தல திரைப்படம் தொடங்கிய சமயத்தில் இருந்த சில மாற்றங்களிலிருந்து எப்படி எல்லாம் இந்த திரைப்படம் உருவாகி வந்தது என படக்குழுவினர் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு பேசிய நடிகர் சிலம்பரசன்.TR, முன்பெல்லாம் மிகவும் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருந்தற்கு அப்போதைய சூழ்நிலையும் பல காரணங்களும் இருந்தது ஆனால் இனிமேல் அப்படி பேசுவதற்கு இடமில்லை எனவும், அனைத்தும் செயல்தான் இந்த முறை வேறு மாதிரி வந்திருக்கிறேன் என பேசினார். மேலும், இனி தனது ரசிகர்கள் இத்தனை நாள் தனக்காக முட்டுக் கொடுத்தது போல இனிமேல் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. இனிமேல் சந்தோஷமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து, தான் செய்வதை பார்க்கலாம் எனவும், "இனிமேல் எனது ரசிகர்களை தலைகுனியவே விடமாட்டேன். தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு செல்லும் கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது. அதில் எனக்கும் ஒரு பங்கு இருக்கிறது. அதை கட்டாயமாக செய்வேன். இனி என்ன செய்யப் போகிறேன் என்பதை மட்டும் பாருங்கள்" என பேசினார் அப்படி நடிகர் சிலம்பரசன் பேசிய அந்த முழு வீடியோ இதோ…