தமிழகத்தின் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவர் விவேக்.தனது காமெடி மூலம் பல படங்களில் ரசிகர்களை சிரிக்கவும்,சிந்திக்கவும் வைத்தவர்.படங்களில் நடிப்பதை தவிர சமூகத்தின் மீது அக்கறை கொண்டு பல சமூகநலன்களை செய்துள்ளார் விவேக்.
ஜனங்களால் சின்னக்கலைவாணர் என்று அன்பாக அழைக்கப்பட்ட இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி அரசு கௌரவித்திருந்தது.பல கோடி பேரால் ரசிக்கப்பட்டு வந்த விவேக் நேற்று திடீரென உடல்நலக்குறைவால் காலமானார்.கொரோனா அச்சத்தையும் தாண்டி பல ரசிகர்கள் பிரபலங்கள் விவேக்கின் உடலுக்கு தங்கள் இறுதி மரியாதையை நேரில் சென்று செலுத்தினர்.விவேக்கின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
சமூகக்கரையில் பெரிய அக்கறை கொண்டவரும் அப்துல் கலாமின் மாணவருமான விவேக் அவரை போலவே மாணவர்கள் மத்தியில் பல விழிப்புணர்வுகளை கொண்டுவரவேண்டும் என்று விரும்பினார்.சுற்றுசூழலை காக்க 1 கோடி மரங்களை நாடுவதே தனது லட்சியம் என்று பல இடங்களில் கூறியிருக்கிறார் விவேக்.
விவேக் 32 லட்சம் மரங்களை நட்டுள்ளார், இவரது மறைவுக்கு பிறகு பலரும் மரங்கள் நடுவதை தொடர்ந்து வருகின்றனர்.இந்த வரிசையில் தற்போது நடிகர் சிலம்பரசன் மற்றும் அவரது மாநாடு படக்குழுவினர் இணைந்துள்ளனர்.விவேக்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக ஷூட்டிங்கில் அனைவரும் மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.
#STR Planted trees in #Maanaadu shooting spot in memory of Legend @Actor_Vivek sir!@SilambarasanTR_ @vp_offl @sureshkamatchi @thisisysr @kalyanipriyan @iam_SJSuryah @Anjenakirti @johnmediamanagr @BlackSheepTamil pic.twitter.com/L0oZsjIN4A
— sureshkamatchi (@sureshkamatchi) April 21, 2021