தனது பருமான தோற்றத்திற்காக பல்வேறு விமர்சனங்களை சந்தித்த நடிகர் சிலம்பரசன்.TR அதிரடி கம்பேக்காக உடல் எடையை பாதியாக குறைத்து ஈஸ்வரன் திரைப்படத்தில் சர்ப்ரைஸான லுக்கிற்கு மாறினார். பின்னர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன்.TR நடித்து வெளிவந்த மாநாடு திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த அடுத்த திரைப்படங்களை மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சிலம்பரசன்.TR நடிப்பில் கடைசியாக வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் - நடிகர் சிலம்பரசன்.TR - இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெற்றிக் கூட்டணியில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் உருவானது. பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் கதையில் வழக்கமான இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் திரைப்படங்களில் இருந்து மாறுபட்டு புதிய வித்தியாசமான கேங்ஸ்டர் திரைப்படமாக வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை வேல் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி.K.கணேஷ் அவர்கள் தயாரித்திருந்தார். விரைவில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாவது பாகமும் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை திரைப்படங்களின் இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR நடித்துள்ள வருகிற மார்ச் 30 ஆம் தேதி பத்து தல திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பத்து தல திரைப்படத்தில், பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் சார்பில் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கும் பத்து தல படத்திற்கு ஃபரூக்.J.பாஷா ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
முன்னதாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த பத்து தல திரைப்படத்தின் முதல் பாடலான நம்ம சத்தம் பாடல் பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வைரல் ஹிட் ஆனது. தொடர்ந்து பத்து தல திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இதனிடையே ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக பத்து தல படத்தில் சிலம்பரசன்.TRன் AGR கதாபாத்திரத்தின் மாஸான டீசர் இன்று மார்ச் 3ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டீசரை பார்த்த நடிகர் சிலம்பரசன்.TR தனது முதல் விமர்சனத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், "இப்போதுதான் பத்து தல டீசரை பார்த்தேன் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். பாயின் சம்பவத்திற்கு ரெடியாகிக் கொள்ளுங்கள்" என தெரிவித்து ஏ.ஆர்.ரஹ்மானை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். ஏற்கனவே பத்து தல படத்தின் டீசர் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் சிலம்பரசன்TRன் இந்த விமர்சனம் இன்னும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. சிலம்பரசன்TRன் அந்தப் பதிவு இதோ…