இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து பொங்கல் விருந்தாய் வெளியான திரைப்படம் ஈஸ்வரன். இதனைத் தொடர்ந்து ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் நடிக்கவுள்ளார் சிம்பு. பத்து தல என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை தமிழ் சினிமாவைச் சேர்ந்த 10 முன்னணி இயக்குனர்கள் வெளியிட்டு அசத்தினர்.
கன்னடத்தில் நார்தன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் முஃப்தி. 2017ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு தொடங்கி, பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஞானவேல்ராஜா தயாரித்து வந்த இந்தப் படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். முஃப்தி படம் இயக்குனரே தமிழ் ரீமேக்கையும் இயக்கி வந்தார். படப்பிடிப்பு தாமதம் உள்ளிட்ட சில விஷயங்களால் இயக்குனர் நார்தன் படத்தில் இருந்து விலகிவிட்டார் என்பது அனைவரும் அறிந்ததே..
அதன் பின் சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய ஓபிலி என்.கிருஷ்ணா இயக்கவுள்ளார் என்ற ருசிகர தகவல் வெளியானது. இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, டீஜே அருணாச்சலம், மனுஷ்ய புத்திரன், கலையரசன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. நாற்காலியில் சிலம்பரசன் அமர்ந்திருப்பது போன்று உள்ளது இந்த போஸ்டர். இந்த படத்திற்கு இசைப்புயல் AR ரஹ்மான் இசையமைத்துள்ளார். ராஜீவன் கலை இயக்கம், ராமகிருஷ்ணன் வசனம், பூபதி செல்வராஜ் எடிட்டிங், அன்பறிவு ஸ்டண்ட் பணிகள் மேற்கொள்கிறார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் சிம்பு ரசிகர்கள்.
பத்து தல படத்திற்கு AR ரஹ்மான் இசை என்று சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. ரீமேக் படம் என்பதால் ரஹ்மான் பணிபுரிவாரா என்ற சந்தேகம் பல ரசிகர்களுக்கு இருந்தது. தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் இசை பிரியர்கள். ஓபிலி என்.கிருஷ்ணா இயக்கிய சில்லுனு ஒரு காதல் படத்திற்கு பிறகு இந்த படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#PathuThala #ObelinKrishna #Studiogreen#SilambarasanTR45 #studiogreen20#pathuthalai #pathuthalaiofficial#STR#SilambarasanTR #GauthamKarthik #Priyabhavanishankar #Teejay pic.twitter.com/4gwKtXGTpK
— Silambarasan TR (@SilambarasanTR_) January 18, 2021