தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன் மற்றும் நடிகை ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்துள்ள திரைப்படம் மஹா . மஹா திரைப்படத்தை இயக்குனர் U.R.ஜமீல் எழுதி இயக்கியுள்ளார்.மஹா ஹன்சிகா மோட்வானியின் 50வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ETCETERA என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் V.மதியழகன் தயாரித்துள்ள மஹா திரைப்படத்தில் ஹன்சிகா மோட்வானியுடன் இணைந்து நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் பிக் பாஸ் புகழ் நடிகை சனம் ஷெட்டி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். நடிகர் சிலம்பரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பிரபல ஒளிப்பதிவாளரான R.மதி ஒளிப்பதிவு செய்யும் மஹா படத்திற்கு தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஜிப்ரான் இசையமைக்கிறார்.முன்னதாக வெளியான மகா படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய டீசர் வெளியாகியுள்ளது.
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை ஹன்சிகாவின் பிறந்த நாளான இன்று பிறந்தநாள் பரிசாக ஹன்சிகாவின் 50-வது திரைப்படமான மஹா திரைப்படத்தின் புதிய டீசர் வெளியாகி உள்ளது. ஸ்டைலான அந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம் .