இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இளைஞர்களை மையப்படுத்தி உருவாகி வெளியான திரைப்படம் ‘பாய்ஸ்’ இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த், அட்டகாசமான நடிப்பை வெளிபடுத்தி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். தற்போது சித்தார் நீண்ட நாள் கழித்து தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். அதன்படி இந்தியன் 2, சித்தா, டெஸ்ட் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்த ரிலீஸில் இருந்து வருகிறது. இதனிடையே தற்போது சித்தார்த் நடித்து வரும் ஜூன் 9 ம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘டக்கர்’. கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் பக்கா கமர்ஷியல் திரைப்படமாக உருவான டக்கர் படத்திற்கு ரசிகர்களிடையே தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது,
இந்நிலையில் நடிகர் சித்தார்த் அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு தன் ரசிகர்கள் முன்னிலையில் தன் 20 ஆண்டு கால திரைப்பயணம் குறித்தும் அவர் நடிப்பில் வெளியாகவுள்ள அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்வில் சித்தார்த் அவர்களிடம் வருங்காலத்தில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 2000ரூபாய் நோட்டுகள் கொடுக்கப்பட்டு இது எப்படி மாற்றுவீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர்,
“20 வருஷமா நான் என்னிக்கு பணம் சம்பாதிக்க ஆரம்பிச்சேனோ, அப்போதிருந்து என் வீட்டுக்கு வருமான வரி சோதனை நடந்ததில்லை.. நான் அவ்ளோ ஒழுங்கா வரி கட்டுவேன். நல்ல குடிமகனா இருக்குனும்னா வரி கட்டுங்கனு சொல்லுவேன்.இவ்ளோ வருஷம் பயப்படாம உண்மைய பேசுறதுக்கும் அதுதான் காரணம். என்கிட்ட சொந்த வீடு கிடையாது. என்கிட்ட இவ்ளோ ஏக்கர்.. இவ்ளோ நிலம் கிடையாது. நான் வாங்குன எல்லா சம்பளமும் வரி கட்டுனதுக்கா அப்பறம் ஒன்னு படத்துல போடுவேன். இல்லன்ன வங்கில போட்றுக்கேன்.." என்றார் நடிகர் சித்தார்த்.
மேலும் சித்தார்த் சுற்றி பரவி வரும் வதந்திகள் குறித்து கேட்டபோது.. "மோசமான வதந்திகள் இணையத்தில் போட்டு வராங்க.. நான் இறந்துட்டேன்னு ஒரு வீடியோ போட்ருக்காங்க.. நானே போய் 'Good Guy R.I.P Gone too soon ' என்று எழுதிட்டு வந்தேன்.. எனக்கு 20 வயசுல குழந்தை இருக்குனு லாம் செய்தி வரும்.. எங்க காலத்தில் பார்த்து தெரிஞ்ச நடந்த விஷயத்தை பேசுவோம்.. இன்னிக்கு யாரோ சொன்னத அப்படியே நம்பி பேசுறோம். இந்த தலைமுறைக்கு ஏற்ற நட்பு னா Chat GPT. ஏன்னா கம்யூட்டரே ஒழுங்கா பேச ஆரம்பிடுச்சு..” என்றார் சித்தார்த்.
மேலும் சித்தார்த் அவரது திரைப்பயணம் குறித்தும் வெளியாகவிருக்கும் டக்கர் திரைப்படம் குறித்தும் பகிர்ந்து கொண்ட பல சுவாரஷ்மான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..