தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் தன் தனித்துவமான இளமை துள்ளும் நடிப்பின் மூலம் கவர்ந்து முன்னணி கதாநயாகனாக வலம் வருபவர் சித்தார்த். இயக்குனர் மணிரத்னம் அவர்களின் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்த சித்தார்த் கடந்த 20 வருடங்களில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து தனக்கான ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். தற்போது இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து சித்தார்த், டெஸ்ட், சித்தா மற்றும் பல சில படங்களில் நடித்து வருகிறார்.. இதனிடையே ஆக்ஷன் ஹீரோவாக சித்தார்த் நடித்து வரும் ஜூன் 9 ம் தேதி டக்கர் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்களிடையே அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் சித்தார்த் அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு தன் ரசிகர்கள் முன்னிலையில் தன் 20 ஆண்டு கால திரைப்பயணம் குறித்தும் அவர் நடிப்பில் வெளியாகவுள்ள அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்வில் சித்தார்த் அவர்களை இயக்குனர் ஷங்கர் அவர்களிடம் பாய்ஸ் திரைப்படத்திற்கு பரிந்துரைத்த மறைந்த பிரபல எழுத்தாளர் திரைக்கதைஆசிரியார் சுஜாதா ரங்கராஜன் அவர்களின் மனைவி சுஜாதா சித்தார்த் அவர்களை சந்திக்க சர்ப்ரைஸ் ஆக நிகழ்சிக்கு வருகை தந்தார்.
அவரை பார்த்த இன்பதிர்ச்சியில் நடிகர் சித்தார்த் உடைந்து அழுதார். பின் சித்தார்த் குறித்து சுஜாதா அவர்கள் பேசியது, “என் கணவரிடம் ஷங்கர் படத்தில் சித்தார்த் நடிக்க சொன்னேன். அவர் சித்தார்த் இயக்குனராக வேண்டும் னு இருக்கான். அவன் நடிக்க மாட்டான் என்றார். நான் பின் ஷங்கரிடம் சொன்னேன். அதன் பின் ஷங்கர் சித்தார்த் கிட்ட பேசியும் சித்தார்த் அதை மறுத்து விட்டார். பின்னர் மணிரத்னம் இவரிடம் சொல்லி அனுப்பி வைத்தார். சித்தார்த் அந்த கதைக்கு பொறுத்தமான ஆள். அதன்படியே அந்த படத்திற்கு பொறுத்தமாகிட்டார்." என்றார் சுஜாதா..
பின் தொடர்ந்து பேசிய சித்தார்த், "நான் உடைஞ்சு போயிட்டேன். மணி சாரிடம் வேலை செய்றப்போ முதல் முறையாக நான் படிச்ச வசனம் சுஜாதா ரங்கராஜன் சாருடையது.. அன்னிக்கு சுஜாதா அம்மா என்னை பற்றி ஷங்கர் சாரிடம் சொல்லலனா என் வாழ்க்கை எங்கேயோ போயிருக்கும்.. 20 வருஷம் சினிமா துறையில் இந்த நிலை வந்திருக்காது.. என்னால் இந்த நாளை மறக்க முடியாது.இந்த தருணத்தில் நான் உறைந்து போய் இருக்கிறேன். நான் பொதுவாகவே சர்ப்ரைஸ் ஆகுற ஆள் கிடையாது. இது சர்ப்ரைஸ் லாம் தாண்டி ஒரு உணர்வு.." என்றார் சித்தார்த்.
பின் தொடர்ந்து மேலும் சுஜாதா அவர்கள், "மணிரத்னமிடம் ஷங்கரிடம் சொன்னப்போ.. மணிரத்னம் சித்தார்த் பற்றி, இவன் இயக்குனருக்குலாம் வேலைக்கு ஆக மாட்டான். இவன் எதோ பண்ணிட்டு இருக்கான் என்றார். அதன்பின் தான் நான் முடிவு பண்ணேன் இவர் நடிகராதான் ஆவருனு.” என்றார் பின் சித்தார்த் “இப்போ மணி சார் கிட்ட கேட்டா உனக்கு நடிப்பு வேலைக்கே ஆகாது னு சொல்லுவார். அது உண்மையா இருந்தாலும் அதை நான் அவர் என்னிடம் காட்டும் அன்பா எடுத்துக்குறேன்.” என்றார் நடிகர் சித்தார்.
மேலும் சித்தார்த் அவரது திரைப்பயணம் குறித்தும் வெளியாகவிருக்கும் டக்கர் திரைப்படம் குறித்தும் பகிர்ந்து கொண்ட பல சுவாரஷ்மான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..