உலகநாயகன் கமல்ஹாசன் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் விக்ரம் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் தனது KH-ஹவுஸ் ஆஃப் கதர் நிறுவனத்தின் தொடக்கத்திற்கு அமெரிக்காவில் உள்ள சிக்காகோவிற்கு பயணம் மேற்கொண்டார். பயணம் முடிந்து சென்னை திரும்பிய கமல்ஹாசனுக்கு லேசான இருமல் தொந்தரவு இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உலகநாயகன் கமல்ஹாசனின் உடல்நிலை சீராக இருப்பதாக சமீபத்தில் மருத்துவமனை அறிக்கை வெளியிட்ட நிலையில் தற்போது, தொடர்ந்து கோவிட்19 சிகிச்சைகள் அளிக்கபட்டு வருவதாகவும் கமல்ஹாசன் நலமுடன் இருக்கிறார் என்றும் அவருடைய உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாகவும் இன்று(நவம்பர் 24) மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது தந்தையின் உடல் நலனிற்க்காக பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றி... அவர் நன்றாக தேறி வருகிறார். விரைவில் குணமடைந்து வருவார்” என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தொலைபேசி வாயிலாக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thankyou for all your wishes and prayers for my fathers health 🙏 He is recovering well and is looking forward to interacting with all of you soon !!
— shruti haasan (@shrutihaasan) November 24, 2021
Actor Politician #KamalHaasan Official Health Update!!
— RIAZ K AHMED (@RIAZtheboss) November 24, 2021
He's undergoing treatment for #Covid_19 & continues to be stable.#sriramachandramedicalcentre @ikamalhaasan @RKFI @maiamofficial @idiamondbabu @MandviSharma pic.twitter.com/NXAcdIX7f3