விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு தொடரின் மூலம் சீரியலில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன்.இந்த தொடரில் தனது நடிப்பால் தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னியாக உருவெடுத்தவர் ஷிவானி நாராயணன்.தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்திருந்தார்.
நடனத்தில் ஆர்வம் கொண்ட ஷிவானி ஜோடி நம்பர் ஒன் தொடரிலும் பங்கேற்றார்.இவரது நடன வீடியோக்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற தொடரில் நடித்து வருகிறார்.இந்த தொடரில் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார் ஷிவானி நாராயணன்.கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட இந்த தொடரின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீரியல் நடிகைகளில் தனக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளத்தையே ஷிவானி பெற்றுள்ளார்.கொரோனா காரணமாக இவர் நடித்து வரும் ரெட்டை ரோஜா சீரியலின் ஷூட்டிங்கும் தடைபட்டுள்ளது.விரைவில் இந்த சீரியலின் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருப்பார் ஷிவானி.ரசிகர்களுடன் கலந்துரையாடுவது,அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது,இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் லைவ் வருவது என்று எப்போதும் இருந்து வந்தார் ஷிவானி.
நடனம் மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்டவற்றில் ஆர்வம் கொண்ட ஷிவானி,தனது நடன மற்றும் ஒர்க்கவுட் வீடியோக்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வந்தார்.ஷிவானியின் புகைப்படங்களும்,வீடியோக்களும் ரசிகர்களிடம் எப்போதும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இந்நிலையில் லாக்டவுன் நேரத்தில் தினமும் ஏதேனும் ஒரு புகைப்படத்தையோ,வீடீயோவையோ பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார் ஷிவானி.இவரது புகைப்படங்களும் வீடியோக்களும் இன்ஸ்டாகிராமில் மிக பிரபலமான ஒன்றாக இருந்து வந்தன.
சில நாட்களுக்கு முன் டாக்டர் படத்தில் இருந்து வெளியான செல்லம்மா என்ற பாடல் செம ஹிட் அடித்து வருகிறது.சிவக்ரத்திகேயனின் ஜாலியான வரிகளோடு அனிருத்தின் இசையும் சேர்ந்து இந்த பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது.இந்த பாடலின் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் ஆடிய ஸ்டெப்பும் வைரலானது.இதற்கு ஸ்டெப்பினை பலரும் செய்து பதிவிட்டு அசத்தி வருகின்றனர்.அந்த வகையில் ஷிவானியும் தனது நடன திறமையை இந்த பாடலுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.அசத்தலாக இவர் நடனமாடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Mezhughu Doll'uuu nee ❤️ #Chellamma #ChellammaDanceChallenge #Doctor #SaturdayVibes #SaturdayMood #StaySafe #StayAlert pic.twitter.com/wE7TH0ODDm
— Shivani Narayanan (@Shivani_offl) July 18, 2020