இந்திய சினிமாவில் மிக முக்கிய இயக்குனராக பிரம்மாண்ட படைப்புகளை கொடுத்து வரும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடித்துவரும் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பட குழு தற்போது காரணத்தை தெரிவித்திருக்கிறது இந்திய சினிமாவே கொண்டாட கூடிய இயக்குனர்களில் ஒருவராக தொடர்ச்சியாக ரசிகர்களை மகிழ்விக்கும் மிஸ்டர் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் 2.O . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - இயக்குனர் சங்கர் கூட்டணியில் சிவாஜி எந்திரன் வரிசையில் ஹட்ரிக் ஹிட்டடித்து தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று வெற்றி படைத்த 2.O திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த 5 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு அடுத்தடுத்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் என இரண்டு பிரம்மாண்ட படங்கள் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன.
கடந்த 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் இயக்குனர் ஷங்கர் - உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் மிகப் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. பல தடைகளை கடந்து தற்போது மீண்டும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகு விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் நடிகர் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தையும் இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கேம் சேஞ்சர் படத்திற்கு கதாசிரியராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒளிப்பதிவாளர் திரு அவர்களின் ஒளிப்பதிவில் சபீர் முஹம்மது படத்தொகுப்பு செய்யும் கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இப்படத்திற்கான வசனங்களை மத்திய அமைச்சரும் முன்னணி எழுத்தாளருமான சு.வெங்கடேசன் அவர்களும் பாடலாசிரியர் விவேக் அவர்களும் எழுதி இருக்கின்றனர். தளபதி விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் வெளியீடாக வந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு அவர்கள் பிரம்மாண்டமாக தயாரிக்கும் கேம் சேஞ்சர் திரைப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நேற்று செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்குவதாக இருந்த நிலையில் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. இது குறித்து பல்வேறு விதமான செய்திகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது X பக்கத்தில் தற்போது உரிய காரணத்தை தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது. அந்தப் பதிவில், “கேம் சேஞ்சர் திரைப் படத்தின் செப்டம்பர் படப்பிடிப்பு சில நடிகர்கள் இல்லாததால் தான் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கப்படும்” என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு இதோ…