கன்னட மற்றும் தெலுங்கு சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ராஷ்மி பிரபாகர்.படிக்கும்போதே செய்தி வாசிப்பாளராக ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்த ராஷ்மி செய்தி சேனல்களில் வேலை பார்த்த பின் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
ஒரு சில சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த இவர் அடுத்ததாக கன்னடத்தில் Lakshmi Baramma என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார்.அடுத்ததாக இவர் தெலுங்கில் நடித்த பௌர்ணமி சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஹிட் அடித்தது.இவற்றை தவிர தமிழில் அருந்ததி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார் ராஷ்மி.
இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.இவற்றை தவிர சில படங்களிலும் நடித்து அசத்தியிருந்தார் ராஷ்மி பிரபாகர்.தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் காவ்யாஞ்சலி சீரியலில் முன்னணி வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார் ராஷ்மி பிரபாகர்.இந்த தொடர் ரசிகர்களிடம் நலன் வரவேற்பை பெற்று வருகிறது.
இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் ராஷ்மி பிரபாகர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.தற்போது தனக்கும் நிகில் பார்கவ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது என்றும் விரைவில் திருமணம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.இவரது நிச்சயதார்த்தம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்ட் அடித்து வருகிறது.