மெட்டி ஒலி,கோலங்கள்,வாணி ராணி உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர் நீலிமா ராணி.தன்னுடைய நடிப்பாலும்,அழகாலும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.இதுமட்டுமின்றி நான் மகான் அல்ல,திமிரு,பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடரில் ஒன்றான அரண்மனைக்கிளி தொடரில் நடித்து வந்தார்.இந்த தொடரில் துர்கா என்ற வில்லி கதாபாத்திரத்தில் இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.இந்த தொடரில் இருந்து விலகுவதாக 2020 தொடக்கத்தில் அறிவித்தார்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த தொடர் இவர் விலகிய கொஞ்ச நாட்களிலேயே கைவிடப்பட்டது.
கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கால் அவ்வப்போது போட்டோக்களையும்,விடீயோக்களையு
இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் நீலிமா புகைப்படங்கள் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.யூடியூப்பில் ஒரு சேனல் தொடங்கி அதிலும் சில வீடியோக்களை பகிர்ந்து வருகிறார் நீலிமா.அதில் தன்னை பற்றி வந்த பல விமர்சனங்கள் குறித்து சுவாரசியமாக பதிலளித்துள்ளார்.நீங்கள் குடிப்பீர்களா,குக் வித் கோமாளி போன்ற பல சுவாரசிய கேள்விகள் அடங்கிய இந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்