தமிழக சின்னத்திரையில் பிரபலமான சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை லக்ஷ்மி வாசுதேவன். தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீரியலான சரவணன் மீனாட்சி, முத்தழகு மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி உள்ளிட்ட பல சீரியல்களில் லக்ஷ்மி வாசுதேவன் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை லக்ஷ்மி வாசுதேவன் தற்போது தனது ரசிகர்கள் நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "மர்ம கும்பல் ஒன்று தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக" கண்கலங்க வீடியோ தனது இன்ஸ்டாகிராம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், செல்போனில் தனக்கு வந்த மெசேஜ் ஒன்றில் இருந்த லிங்கை தவறுதலாக கிளிக் செய்ததன் மூலம் புதிய App ஒன்று மொபைலில் டவுன்லோட் ஆகி அதன் மூலம் தனது செல்போன் ஹேக் செய்யப்பட்டது என தெரிவித்துள்ள நடிகை லக்ஷ்மி வாசுதேவன். தொடர்ந்து தனது வாட்ஸ்அப்பில் இருக்கும் நண்பர்கள் உடன் பணியாற்றுபவர்கள் என அனைவருக்கும் எனது புகைப்படத்தை மார்ஃபிங் செய்து மிரட்டி பணம் கேட்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் “இதுபோன்ற தவறுகளை வேறு யாரும் தயவுசெய்து செய்து விடாதீர்கள்” என்றும் தன் வீடியோவில் கண்கலங்க தெரிவித்துள்ளார். இது குறித்து ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசாரிடம் லக்ஷ்மி வாசுதேவன் புகார் அளித்துள்ள நிலையில், விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து இது குறித்த இதர தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
A post shared by Lakshmi Vasudevan (@lakshmivasudevanofficial)