ஜீ தமிழில் ஒளிபரப்பி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று செம்பருத்தி.ஜீ தமிழில் TRP-யை அள்ளி வந்த முக்கிய தொடர்களில் ஒன்றாக செம்பருத்தி உள்ளது.இந்த தொடரில் ஹீரோ ஹீரோயினாக கார்த்திக் ராஜ் மற்றும் ஷபானா நடித்து வந்தனர்.ப்ரியா ராமன் மற்றொரு முக்கிய வேடமான அகிலாண்டேஸ்வரி வேடத்தில் நடித்து அசத்தி வந்தார்.
இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான ஆதி-பார்வதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.கொரோனாவுக்கு பிறகு இந்த தொடரில் சில முக்கிய மாற்றங்கள் நடந்தன முதலில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த ஜனனி அசோக் குமார் திடிரென்று மாற்றப்பட்டார்.
இதனை தொடர்ந்து இந்த தொடரின் நாயகன் கார்த்திக் தொடரில் இருந்து விலகினார்.இப்படி தொடரில் சில பெரிய மாற்றங்கள் நடக்க ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.புதிய நடிகர்கள் வந்தாலும் தொடரின் பரபரப்பு குறையாமல் சீரியல் குழுவினர் பார்த்துக்கொண்டனர்.
பல பிரச்சனைகளை கடந்து இந்த தொடர் 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக சென்று வருகிறது.இந்த தொடரின் நாயகியாக நடித்து பலரது இதயங்களையும் கவர்ந்தவர் ஷபானா.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை பகிர்ந்து வருவார்.தற்போது தனது புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.