தமிழ் திரையுலகில் தாகம் தீரா கலைஞர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். நடிகர், பாடலாசிரியர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து என்டர்டெயின் செய்து வருகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்டு. அத்ரங்கி ரே எனும் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த 2017-ம் ஆண்டு தனுஷ் இயக்கத்தில் வெளியான படம் ப.பாண்டி. தனுஷ் எனும் சிறந்த இயக்குனரை இப்படம் வெளிக்காட்டியது. ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தனுஷ்-ஷான் கூட்டணி பிரபலமானது.

இந்நிலையில் ஷான் ரோல்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், ப.பாண்டி பட போஸ்டரை பகிர்ந்து, இந்த படத்தை கோடி தடவை பார்த்தாலும் அலுக்காது. நடிகர் தனுஷின் எவர் கிரீன் படைப்பு என்று புகழாரம் தெரிவித்துள்ளார். இந்த பதிவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

இந்த படத்த கோடி தடவ பாத்தாலும் அலுக்காது. @dhanushkraja வின் எவர்க்ரீன் படைப்பு! pic.twitter.com/Vn2U3r14ju

— Sean Roldan (@RSeanRoldan) May 25, 2020