தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Anil Ravipudi இயக்கியிருந்தார்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது.இதனை அடுத்து தனது 36ஆவது படத்தில் மஹரிஷி பட இயக்குனர் வம்சியுடன் இணைகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.
இதனை தொடர்ந்து இவர் கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் உடன் Sarkaru Vaari Paata படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை மகேஷ் பாபுவின் GMB ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் .இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது,விரைவில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தாமதமானது.
இந்த படம் மே 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் செம ஹிட் அடித்து வருகிறது.இன்று மஹாசிவராத்தியை முன்னிட்டு படத்தின் அசத்தலான புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.செம மாஸான இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Wishing you all a happy #MahaShivaratri! May the ever benevolent Lord Shiva bring strength and abundance! Let good conquer all evil! 🙏 pic.twitter.com/PnNeo5HbHE
— Mahesh Babu (@urstrulyMahesh) March 1, 2022