தமிழ் சினிமாவில் கலை இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவர் டி சந்தானம்.செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கலை இயக்குனராக பணியாற்றி பெரிய வரவேற்பை பெற்றிருந்ததார்.அடுத்ததாக தெய்வ திருமகள் படத்தில் பணியாற்றினார்.
அடுத்ததாக விஜயின் சர்கார்,ரஜினியின் தர்பார்,தனுஷின் ஜகமே தந்திரம்,விக்ரமின் மஹான் உள்ளிட்ட பெரிய ஹீரோ படங்களிலும் பணியாற்றி அசத்தினார்.இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் படங்களில் சமீபகாலமாக பணியாற்றி வந்தார் சந்தானம்.
அடுத்ததாக வெளியாகவுள்ள முருகதாஸ் தயாரித்துள்ளார் 1947 படத்தில் பணியாற்றியுள்ளார்.தற்போது ஒரு துக்க செய்தி கிடைத்துள்ளது.இவர் நேற்றிரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக காலமாகியுள்ளார் என்ற சோகமான செய்தி கிடைத்துள்ளது.
இவரது திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இவரது இழப்பு தமிழ் சினிமாவிற்கு ஒரு பேரிழப்பு என பலரும் தங்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.இவரது ஆத்மா சாந்தி அடைய ரசிகர்களும்,பிரபலங்களும் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.