தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘மாவீரன்’. சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவான இப்படத்தினை மண்டேலா பட இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார். படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இயக்குனர் மிஷ்கின், சரிதா, யோகி பாபு, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிதுள்ளனர். படத்தின் அறிவிப்பிலிருந்தே படத்திற்கான எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக சிவகார்த்திகேயனின் மாவீரன் வெளியாகியுள்ளது.

ரசிகர்களின் ஆரவார கொண்டாட்டத்துடன் வெளியான மாவீரன் திரைப்படத்திற்கு பரவலாக நேர்மறையான விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் நடிகை சரிதா அவர்கள் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் நடித்தது குறித்து நமது கலாட்டா பிளஸ் சிறப்பு நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது, “படத்தோட கதை சொன்ன விதம் பிரமாதம். அவர் சொன்ன விதத்திலே நான் படம் பார்த்துவிட்டேன். நான் என்ன கவலை பட்டேன் என்றால் படப்பிடிப்புதளம் குறித்து தான்.. ஏன்னா அது கோவிட் நேரம். அந்த நேரம் இவ்ளோ ரிஸ்க் எடுத்து பண்ணனுமா னு யோசிச்சேன். எனக்கு நிறைய உடல்நல பிரச்சனை இருக்கு.. அதுமட்டும் தான் எனக்கு பயமா இருந்துச்சு. எனக்கு சிவகார்த்திகேயன் ரொம்ப பிடிக்கும். அவரோட பயணம், படங்கள் எல்லாம் குடும்பத்தோட ரசிக்குறா மாதிரி இருக்கும். அப்படிபட்ட குழு அமைந்தது” என்றார்.

அதன் பின்னர், “தயாரிப்பாளர் அருண் விஷ்வா அருமையான படம். இவ்ளோ பெரிய படம் அமைஞ்சிது. அதை கொடுக்குற விதம் ரொம்ப கஷ்டம். முதல் முறையா அதை பன்றது தான்.. அதையும் அவர் செய்தார். அவர் பேசும் போது அவர் அம்மாவ பத்தி சொன்னார். அவர் அம்மா அப்போதான் இறந்தாங்க. படம் தயாரிக்கனும் ன்றது அவங்க அம்மா கனவு. அதை சொல்லும் போதே எனக்கு உணர்வு பூர்வமா ஆயிடுச்சு.. அவரோட அம்மாவிற்கு என்னை பிடிக்கும் என்றார். ரொம்ப மரியாதை கொடுத்தாங்க.. படத்தில் நல்ல கதாபாத்திரமும் கூட.. அதனால் தான் இந்த படத்திற்கு ஒப்பு கொண்டேன்.” என்றார். அதை தொடர்ந்து, “படத்தில் முதல் நாள் நான் இயக்குனரை கேட்டேன். எப்படி வேண்டும் என்றேன். எனக்கு அப்படி கேட்கறது விருப்பம். அதன்படி கேட்டு பண்ணேன். அவர் சொன்னா மாதிரி தான் நடிச்சிருக்கோம். எல்லோருக்கும் அவர் சொல்லி கொடுப்பார்‌. அதனால் தான் நான் அவரை குட்டி கே.பி சார் னு சொல்லுவேன். ஏன்னா அவரோட நோக்கத்தை நான் நம்பினேன். “ என்றார் நடிகை சரிதா.

மேலும் நடிகை சரிதா அவர்கள் மாவீரன் திரைப்படம் குறித்தும் அவரது திரைப்பயணம் குறித்து, பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ உள்ளே.