தமிழர் பெருமையை உலகறிய செய்து ஒட்டு மொத்த சர்வதேச தொழிலதிபர்களையும் திரும்பி பார்க்க வைத்தவர் தமிழகத்தை சேர்ந்த கண்ணன் ரவி. கடந்த 1995-ல் தொடங்கப்பட்ட கண்ணன் ரவி குழுமம் படிப்படியாக தங்கள் தனித்துவமான தொழில்முனைவு வளர்ச்சியின் மூலம் சர்வதேச அளவில் வளர்ந்து வந்தனர். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகளவு பேசப்பட்டனர். தற்போது கண்ணன் ரவி குழுமத்தினர் ஐக்கிய அரபு அமீரகத்தில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக விளங்கி வருகின்றனர். துபாய் மற்றும் அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக நகரங்களில் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வெற்றியடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணன் ரவி குழுமத்தின் ராஜ்ஜியம் நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டு வருவதற்கு திரு கண்ணன் ரவியின் மாபெரும் உழைப்பு முக்கிய காரணமாகும். அதன் வெளிப்பாடாகவே பல்வேறு தொழில் துறைகளில் கண்ணன் ரவி குழுமம் குறிப்பிடப்படும் பெயர்களில் ஒன்றாக இருந்து வருகிறது, திரு கண்ணன் ரவி அவர்களை போலவே அயராத உழைப்பிலும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாகவும் பல்வேறு துறைகளில் வளர்ச்சியை அடைந்து வருபவர் கண்ணன் ரவி அவர்களின் மகனான தீபக் கண்ணன் ரவி. இவரது புதுமையான தொழில் முனைவு யோசனைகளும் அதன் செயலாக்கமும் தொழில் முனைவு துறையில் வெற்றி வாகை பெற்று தந்து வருகிறது. அதன்படி திரு. தீபக் கண்ணன் ரவி தனது தந்தையுடன் இனைந்து கண்ணன் ரவி குழுமம் சார்பில் புதிய தொழில் பாதையில் தற்போது அடியெடுத்து வைத்துள்ளனர்

இதுவரை எலக்ட்ரோ மெக்கானிக்ஸ், ரியல் எஸ்டேட் போன்ற பல்வேறு தொழில் துறைகளில் சாதித்து வந்த கண்ணன் ரவி குழுமம் தற்போது உணவகத் தொழிலிலும் கால் பதிக்கின்றனர். அதன்படி கண்ணன் ரவி குழுமம் அவர்களின் முதலாவது Food and Beverages Unit-ஐ தொடங்கியுள்ளது. தீபக் கண்ணன் ரவி அவர்களின் முயற்சியில் ‘பராக்’ என்ற பெயரில் உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. பராக் உணவகம் தற்போது இந்தோ -அரேபிய உணவுகளை உள்ளடக்கிய சிறப்பு வாய்ந்த உணவகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உணவகத்தின் திறப்பு விழா கடந்த 26.05.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று துபாய், அல் கராமா, ஷேக் கலீபா-பின்-ஜாயித் சாலையில் நடைபெற்றது. இந்த மாபெரும் பிரம்மாண்ட திறப்பு விழாவில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கதிர் ஆனந்த் அவர்களும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திரு தொல். திருமாவளவன் அவர்களும் மற்றும் தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ் அவர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

மேலும் கண்ணன் ரவி குழுமத்தின் பராக் உணவகத்தின் திறப்பு விழாவில் திரையுலக பிரபலங்களான சரத்குமார், ராதிகா சரத்குமார், பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், பிரகாஷ் ராஜ், சுந்தர் சி, வெங்கட் பிரபு, விஷால், ஜெய், சாந்தனு, கீர்த்தி சுரேஷ், பிரியா ஆனந்த், சித்தி இத்தானி,சதீஷ், இளவரசு, ரோபோ ஷங்கர் மற்றும் மஞ்சும்மேல் பாய்ஸ் பட நாடிகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களை தொடநர்ந்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன் சிவா, சேவியர் பிரிட்டோ, ஜெகதீஷ், யூடியூபர் இர்ஃபான், விக்னேஷ் காந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் திரைப்பிரபலங்களுடன் பல்வேறு துறைகளின் ஜாம்பவான்கள் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.

கண்ணன் ரவி குழுமத்தினர் இதுவரை அடியெடுத்து வைத்த தொழில் துறைகளில் சாதித்தது மட்டுமல்லாமல் அந்தந்த துறைகளில் முத்திரை பதித்து மாபெரும் ராஜ்யத்தையே அமைத்துள்ளனர். சவால்களை கடந்து சாதித்து காட்டிய கண்ணன் ரவி அவர்கள் தனது மகன் தீபக் கண்ணன் ரவி அவர்களின் இந்த புதிய முயற்சியில் நம்பிக்கை ஊட்டும் விதமாக இருந்து வருகிறார். பல்துறைகளில் முன்னோடியாக திகழும் கண்ணன் ரவி குழுமம் இனி உணவு துறையிலும் தடம் பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது