தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் அனைவருடனும் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் காமெடியில் கலக்கி, தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் காமெடியனாக திகழ்ந்த நடிகர் சந்தானம் தொடர்ந்து கதாநாயகனாகவும் வரிசையாக கலகலப்பான காமெடி என்டர்ட்டெயினிங் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
கடைசியாக மேயாதமான் மற்றும் ஆடை படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடித்த குலு குலு திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. முன்னதாக நகைச்சுவை ஸ்பை த்ரில்லர் படமாக கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காக சந்தானம் நடித்துள்ள திரைப்படம் ஏஜென்ட் கண்ணாயிரம்.
இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கதாநாயகனாக தனது திரைப்பயணத்தில் சந்தானம் நடிக்கும் 15வது திரைப்படமாக பிரபல கன்னட இயக்குனர் பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் தயாரான #SANTA15 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது.
#SANTA15 திரைப்படத்திற்கு கிக் என பெயரிடப்பட்டுள்ளது. சந்தானம் உடன் இணைந்து தன்யா போப் கதாநாயகியாக நடித்துள்ள கிக் படத்தில் ராகினி திரிவேதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஃபார்ச்சூன் பிலிம்ஸ் தயாரிப்பில், சுதாகர்.S.ராஜ் ஒளிப்பதிவில், நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு செய்துள்ள கிக் திரைப்படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார்.
கிக் திரைப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைப்பெற்று வருகின்றன. இந்நிலையில் சந்தானத்தின் கிக் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (ஆகஸ்ட் 31) விநாயக சதுர்த்தி தினத்தன்று வெளியாகியுள்ளது. கலக்கலான அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
Happy Vinayakar Chathurthi everyone 😊
— Santhanam (@iamsanthanam) August 31, 2022
Here is the first look of my next #SANTA15, titled #KICK 💥
🙏🏻😊#KickFirstLook #SantasKick @iamprashantraj @TanyaHope_offl @raginidwivedi24 @ArjunJanyaMusic @iamnaveenraaj @Fortune_films #ProductionNo10 @johnsoncinepro pic.twitter.com/VzgXAYIlXb