தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராகவும் தென்னிந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தியாகவும் திகழும் தளபதி விஜய் அவர்களின் திரை பயணத்திலேயே இதுவரை எந்த திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை கிளப்பிய திரைப்படம் தான் லியோ. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி தளபதி 67 திரைப்படத்தில் இணைவதாக பீஸ்ட் படத்தின் சமயத்திலேயே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பிய நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது நான்காவது திரைப்படமாக உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களை வைத்து இயக்கிய விக்ரம் திரைப்படத்தின் இமாலய வெற்றி அந்த எதிர்பார்ப்பை இன்னும் கூட்டியது. வாரிசு திரைப்படத்தின் சமயத்தில் இருந்தே தளபதி 67 படத்திற்கான அப்டேட்களுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்தனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செல்லும் இடமெல்லாம் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்களை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்க, வாரிசு ரிலீசுக்கு பிறகு வெளிவரும் என லோகேஷ் கனகராஜ் அறிவித்தார்.

அதன்படி கடந்த ஜனவரியில் வாரிசு திரைப்படம் ரிலீசான பிறகு லியோ திரைப்படத்தின் அதிரடியான அறிவிப்புகள் வரிசையாக வெளிவரத் தொடங்கின. அந்த வகையில் வெளிவந்த லியோ படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்க, லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைந்து இயக்குனர் ரத்னகுமார் மற்றும் இயக்குனர் தீரஜ் வைதி ஆகியோர் லியோ திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களில் பணியாற்றியுள்ளனர்.

அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தில் முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்றும், லியோ திரைப்படத்திற்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என பட்டக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முன்னதாக கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த கட்டமாக தற்போது காஷ்மீரில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இயக்குனர் மிஷ்கின் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன் பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்த நிலையில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் காஷ்மீரில் லியோ பட ஷூட்டிங்கில் இணைந்தார்.

கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் நடைபெற்று வந்த லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 24 ஆம் தேதியோடு நிறைவடைவுள்ளதாக தெரிகிறது. அடுத்த கட்டமாக சென்னையில் லியோ திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது காஷ்மீரில் தன் பகுதி படப்பிடிப்பை நடிகர் சஞ்சய் தத் நிறைவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் சென்னையில் நடைபெறும் அடுத்த கட்ட படப்பிடிப்பில் அவர் இணைய இருப்பதாகவும் தெரிவித்து லியோ படப்பிடிப்பு தளத்தில் இருந்து புதிய புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அட்டகாசமான அந்த பதிவு மற்றும் புகைப்படம் இதோ…