திரையுலகில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்து பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. கடந்த ஆண்டு நடிகை சமந்தா நடிப்பில் தமிழில் வெளியான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, தெலுங்கில் ‘யசோதா’ ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து இந்த ஆண்டு சமந்தா நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக இதிகாச கதைகளத்தில் வெளியான ‘சாகுந்தலம்’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் படுதோல்வியை அடைந்தது. அதன் பின் மீண்டும் சமந்தா பேமிலி மேன் இயக்குனர்களான ராஜ் மற்றும் டி கே கூட்டணியில் உருவாகி வரும் ‘சிட்டாடேல்’ என்ற ஆக்ஷன் தொடரில் நடித்து வருகிறார். திரைத்துறையில் குறுகிய காலத்திற்கு ஒய்வு பெறுவதாக தகவல் வெளியானதன் படி தற்போது நடிகை சமந்தா எந்த படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்து வருகிறார்.
இதனிடையே நடிகை சமந்தா நடிப்பில் தெலுங்கு திரையுலகில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘குஷி’. விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்து காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சிவா நிர்வாணா. மேலும் இப்படத்தில் ஜெயராம், சச்சின் கேதகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, ரோகினி, சரண்யா பிரதீப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் முரளி ஜி ஒளிப்பதிவு செய்ய படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஹேஷம் அப்துல் வஹாப். முன்னதாக இவரது இசையில் முன்னதாக வெளியான ‘என் ரோஜா நீயே’, ‘ஆரத்யா’ மற்றும் குஷி பாடல்கள் அனைத்து மொழிகளிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து டிரெண்ட்டானது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களிடையே நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை கூட்டி வரும் இப்படத்தின் டிரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இஸ்லாமிய பெண்ணான சமந்தாவை காதலிப்பதும் பின் பிராமண பெண் என்று தெரிய வர அதன்பின் இரு வீட்டாரின் சிக்கல்களுடன் கதாநாயகி கதாநாயகன் திருமணம் நடந்து முடிகிறது. அதன்பின் இருவருக்கு இடையே யான காதல் நிறைந்த போராட்டங்கள் தான் குஷி திரைப்படம். உணர்வு பூர்வமாக காதலுடன் கலகலப்பான தருணங்களுடன் அடங்கிய குஷி திரைப்படத்தின் தற்போது ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அனைத்து மொழி ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பெற்றிருக்கும் குஷி திரைப்படம் இந்த ஆண்டின் வெற்றி படமாக அமைய அதிகபடியான வாய்புகள் உள்ளது என திரையுலகில் பேசி வருகின்றனர். மேலும் சமந்தாவின் முந்தையா படுதோல்வி படமான சாகுந்தலம் படத்தையடுத்து இப்படம் அவருக்கு முழுமையான வெற்றியயை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.