மலையாளம் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் துல்கர் சல்மான்.மலையாளம் சினிமா மட்டுமின்றி தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ஜொலித்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக தொடர் வெற்றிகளால் அவதரித்தார் துல்கர் சல்மான்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான குரூப் திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றிருந்தன.தென்னிந்திய மொழிகளை தாண்டி ஹிந்தியிலும் சில முன்னணி நட்சத்திரங்களோடு ஜோடி போட்டு நடித்து அசத்தியுள்ளார் துல்கர்.அடுத்ததாக இவர் நடித்துள்ள ஹே சினாமிகா,சல்யூட் உள்ளிட்ட படங்கள் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளன.
ஹே சினாமிகா படம் பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது இந்த பட பர்ஸ்ட்லுக் சில நாட்களுக்கு முன் வெளியானது.துல்கர் நடித்துள்ள சல்யூட் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.இந்த படத்தினை துல்கரின் Wayfarer Films தயாரித்துள்ளனர்.ரோஷன் ஆண்ட்ருஸ் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் வெளியாகியுள்ளது,ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ள இந்த இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்