கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.
இப்படிப்பட்ட சூழலில் திரைப்படங்களின் ஷூட்டிங்கை நடத்துவது மிகவும் சவாலான ஒன்றாக அமைந்து வருகிறது. சமீபத்தில் RRR படத்தின் ஷூட்டிங் துவங்கியது. இங்கிலாந்தில் அக்ஷய் குமாரின் பெல் பாட்டம் படத்தின் ஷூட்டிங் முழுவதும் நிறைவடைந்தது. அமீர்காணும் அவரது பங்கிற்கு அயல் நாடுகளில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில் சல்மான் கான் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படமான ராதே படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.
பிரபு தேவா இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் படம் தான் ராதே. இந்த படத்தில் திஷா பட்டானி, ரந்தீப் ஹூடா, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடிக்கின்றனர். நடிகர் பரத் சல்மான் கான் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் இரண்டாவது முறையாக பாலிவுட்டில் கால்பதிக்கிறார் பரத். இப்படம் சென்ற மே 22-ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இப்படத்தின் மீதம் உள்ள படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் துவங்கியது. லோனாவா அருகில் ஆம்பி வேலி பகுதியில் இந்த படப்பிடிப்பு நடந்து வந்தது. மும்பை ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து பரத் பகிர்ந்த புகைப்படம் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தது என தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இயக்கத்தில் அசத்தி வரும் பிரபு தேவா நடித்து வரும் திரைப்படம் பஹீரா. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்தர் இயக்கி வருகிறார். பிப்ரவரி 14-ம் தேதியான காதலர் தினத்தன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பரதன் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் காதலன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும் ஒரு பக்கம் பேசப்பட்டது.
மொட்டையடித்த கெட்டப்புடன் பிரபுதேவா இருக்கும் போஸ்டர் சமீபத்தில் இணையத்தில் வைரலாகியது. கணேசன் சேகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டிங் செய்கிறார். படத்தில் நடிகை காயத்ரி படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். அனேகன் படத்தில் நடித்த அமைரா தாஸ்தூரும் இந்த படத்தில் ஒரு சூப்பரான ரோலில் நடிக்கிறார்.
And it’s a wrrrap! #Radhe@BeingSalmanKhan @bindasbhidu @RandeepHooda @DishPatani @PDdancing @SohailKhan @atulreellife @reellifeprodn @TheGautamGulati pic.twitter.com/tMyl2pRp4O
— Salman Khan Films (@SKFilmsOfficial) October 14, 2020