தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் சாக்ஷி அகர்வால்.அட்லீ இயக்கத்தில் உருவான ராஜா ராணி படத்தில் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக முதலில் வந்தவர்.அடுத்தடுத்து நல்ல படங்களை தெரிந்தது சிறந்த துணை நடிகையாக உருவெடுத்தார்.பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த சாக்ஷிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனை தொடர்ந்து தல அஜித் நடிப்பில் உருவான விஸ்வாசம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் சாக்ஷி.இதனை தொடர்ந்து டெடி,அரண்மனை 3,சிண்ட்ரெல்லா உள்ளிட்ட சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால்.இதற்கிடையில் விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் சாக்ஷி அகர்வால்.
பிக்பாஸ் சீசன் 3 தொடரில் பங்கேற்ற பின் சாக்ஷிக்கு ரசிகர்கள் பலம் கூடியது.தமிழ் மக்களிடையே பிரபலமான முகமாக சாக்ஷி மாறினார்.சில படங்களில் பிறருக்கு டப்பிங் கொடுத்துள்ளார் சாக்ஷி.மேலும் நடனம்,ஒர்கவுட் உள்ளிட்டவற்றில் மிகவும் கவனம் செலுத்துவார் சாக்ஷி.பல விழா மேடைகளில் இவர் நடனமாடியுள்ளார்.அவ்வப்போது தனது ஒர்க்கவுட் விடீயோக்களையும் சாக்ஷி வெளியிட்டு ரசிகர்களுக்கு டிப்ஸ் வழங்கியும் வந்தார்.
கொரோனா காரணமாக பல பிரபலங்களும் சமூகவலைத்தளங்களில் அதிக நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.சாக்ஷி தனது ரசிகர்களுடன் அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்தும்,ஒர்கவுட்,பிட்னஸ் குறித்த தகவல்களை பகிர்ந்தும் வந்தார்.தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் சாக்ஷி கடினமான ஒர்க்கவுட் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.அப்படி கடினமான வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்கள் தவறாமல் இதனை செய்யவேண்டும் என்று அறிவுறுத்தி வந்தார் சாக்ஷி.இந்நிலையில் இன்று தனது ஸ்கூல்பேக்குடன் ஒர்க்கவுட் செய்து அசத்தும் வீடீயோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சாக்ஷி.இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.சாக்ஷி வெளியிட்டுள்ள இந்த வீடியோக்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்