தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவரான தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் பக்கா பேமிலி என்டர்டைனர் திரைப்படமாக அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்ற பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதனை தொடர்ந்து தனது திரைப்பயணத்யில் 67-வது திரைப்படமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோத் படத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார். லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்சமயம் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். லியோ திரைப்படம் இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக ரிலீஸ் ஆகும் என பட்டக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதனிடையே தளபதி விஜய் அவர்களின் அரசியல் வருகை பற்றி இயக்குனர் SA.சந்திரசேகர் அவர்கள் பதிலளித்துள்ளார். தளபதி விஜய் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான ஆரம்ப காலகட்டத்தில் வெளிவந்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் SA.சந்திரசேகர் அவர்கள் தென்னிந்திய சினிமாவில் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக முன்னணி நட்சத்திர நாயகர்களின் பல திரைப்படங்களை இயக்கியவர். தந்தையாகவும் இயக்குனராகவும் தளபதி விஜயின் திரைப்பயணத்திற்கு அடித்தளமிட்ட இயக்குனர் SA.சந்திரசேகர் அவர்கள் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் கடைசியாக சந்திரசேகர் இயக்கத்தில் உருவான நான் கடவுள் இல்லை திரைப்படம் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அருகே உள்ள ஸ்ரீ புத்திர காமுண்டீஸ்வரர் ஆலயத்தில் இயக்குனர் SA.சந்திரசேகர் அவர்கள் சுவாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து திரும்பிய போது செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் SA.சந்திரசேகர் அவர்கள், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அந்த வகையில் அவரிடம், “நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா சார்? எனக் கேட்டபோது, “யாரைப் பற்றி கேட்கிறீர்கள்? விஜய் பற்றி விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்” என SA.சந்திரசேகர் அவர்கள் பதில் அளித்துள்ளார்.