கடந்த 2022 ம் ஆண்டு வெளிவந்து உலகளவில் மிகப்பெரிய வெற்றியடைந்த படம் ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ பிரம்மாண்ட படங்களை கொடுத்து இந்திய அளவு புகழ்பெற்ற ராஜமௌலி ‘பாகுபலி’ படத்தை இயக்கி உலகளவு புகழ்பெற்றார். அதனை தொடர்ந்து அவர் இயக்கிய ஆர் ஆர் ஆர் திரைப்படம் சர்வதேச அளவில் திரைக்கு வெளிவந்து வெகுவாக மக்களை கவர்ந்தது. ராம் சரண் , ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான இப்படத்திற்கான வசூல் ஒரு புறம் உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் உலகளவில் அங்கீகாரம் கிடைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக உலகில் உயர்ந்த விருதான ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் சிறந்த பாடல் பிரிவில் இடம் வகித்துள்ளது.மேலும் அதன் முன்னதாக கோல்டன் குலோப் விருதினை சிறந்த பாடல் பிரிவில் விருதை வென்று அசத்தியது. ஏற்கனவே புகழின் உச்சியில் இருக்கும் ஆர் ஆர் ஆர் திரைப்படத்திற்கு எல்லையாக ஆஸ்கார் விருது உள்ளது. வரும் மார்ச் மாதம் விருது பெரும் என்று பலரால் எதிர்பார்க்கபடுகிறது.
உலகளவில் பல நாடுகளில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஜப்பான் நாட்டில் இந்த படம் தற்போது 114 திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்து ஓடி சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து நூறு நாள் ஓடிய முதல் இந்திய திரைப்படம் இது என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஜப்பானிய மொழியில் படத்தின் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. அதனுடன் படக்குழு
“லவ் யூ ஜப்பான், ஆர் ஆர் ஆர் படக்குழுவின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.தொடர்ந்து உங்கள் அன்பையும் ஆதரவையும் அளியுங்கள்” என்று குறிப்பிட்டு இருந்தனர்.
அதனை தொடர்ந்து அந்த போஸ்டரை இயக்குனர் ராஜமவுலி பகிர்ந்து அதனுடன்,
“அந்தக் காலத்தில் 100 நாட்கள், 175 நாட்கள் ஒரு படம் ஓடுவது பெரிய விஷயம். காலப் போக்கில் வியாபார அமைப்பு மாறிவிட்டது. கடந்து போன அவை ஒரு அழகான ஞாபகங்கள். ஆனால், ஜப்பான் ரசிகர்கள் அந்த மகிழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளார்கள். லவ் யு ஜப்பான், அரிகடோ கொசாய்மாசு” என ஜப்பான் மொழியிலும், நன்றி தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த பிரத்யேக போஸ்டரையும் இயக்குனரின் பதிவையும் ரசிகர்கள் வெகுவாக பகிர்ந்து வருகின்றனர்.
Back in those days, a film running for 100days, 175 days etc was a big thing. The business structure changed over time...Gone are those fond memories...
— rajamouli ss (@ssrajamouli) January 28, 2023
But the Japanese fans are making us relive the joy ❤️❤️
Love you Japan... Arigato Gozaimasu...🙏🏽🙏🏽 #RRRinJapan #RRRMovie pic.twitter.com/bLVeSstyIa
வசூலிலும் விருதிலும் சாதனை படைத்த ஆர் ஆர் ஆர் திரைப்படம் தற்போது 100 நாள் என்ற சாதனைகளையும் புரிய தொடங்கியுள்ளது. ஆர் ஆர் ஆர் திரைப்படம் பல சாதனைகளுக்கு முன்னோடியாக இந்தியாவிற்கு தற்போது திகழ்கிறது