கன்னட சினிமாவில் இருந்து கடந்த வெளியான ஆக சிறந்த திரைப்படம் ‘காந்தாரா’. ஹோம்பாலே ப்லிம்ஸ் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியிருக்கும் இப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப் பட்டு தென்னிந்தியாவில் பல இடங்களில் வெளியானது மிகப்பெரிய அளவு வரவேற்பு திரைப்படம் வெளியான அன்றே கிடைக்க படத்தை பல மொழிகளில் வெளியிட்டு இந்தியா முழுவதும் படம் பல மொழிகளில் வெளியானது. ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. திரையரங்குகளில் மட்டுமல்லாமல் பிரபல ஒடிடியான நெட்பிளிக்ஸ்ல் வெளியாகி கவனம் பெற்றது. உலக நாடுகள் மேடையில் விருதுகளையும் அங்கீகாரத்தையும் இன்னும் குவித்து கொண்டே வருகிறது.
நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக போராடும் பழங்குடியினர் மற்றும் அவர்களின் குலதெய்வ வழிபாடு மையப்படுத்தி உருவான காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்கபோவதாக முன்னதாக தகவல் வெளியானது.
இந்த இரண்டாம் பாகம் காந்தாரா திரைப்படத்தின் முந்தைய கதையை கூறும் ப்ரிக்வலாக அமையும் என்று முன்னதாக தெரிவித்தனர் அதன்படி காந்தாரவிற்கு முந்தைய கதையில் கிராம மக்களுக்கும் அரசனுக்கும் உள்ள பிரச்சனையை மையப்படுத்தியும் அரசனுக்கு உட்பட்ட நிலங்களையும் மக்களையும் காப்பாற்ற இயற்கையுடன் போராடும் ஒரு கதையாக அமையும் என்றும் பெரும்பாலும் மழைக்காலத்தில் நடக்கவுள்ளதால் மழைக்காலங்களில் படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் அதனை தொடர்ந்து வரும் ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் மிகபெரிய பிரம்மாண்ட பொருட் செலவில் பான் இந்திய திரைப்படமாக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் படம் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்று படக்குழு சார்பில் அறிவிப்பு முன்னதாக வந்தது.
இந்நிலையில் ரசிகர்கள் உற்சாகத்தில் காந்தாரா இரண்டாம் பாகத்திற்கு ஆவலுடன் இருக்கும் நிலையில், ஹோம்பாளே தயாரிப்பு நிறுவனம் அதன் சமூக பக்கத்தில், "இந்த உகாதி புத்தாண்டு நாளை முன்னிட்டு காந்தாரா பாகம் 2 படத்திற்கான கதையில் படக்குழு இறங்கியுள்ளது என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறோம். விரைவில் இயற்கை உடனான உறவு குறித்த படமாக காந்தாரா படம் அமையும்” என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு கொண்ட பதிவினை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.