சன் மியூசிக்கின் பிரபல தொகுப்பாளராக இருந்து சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்களிடம் பிரபலமானவர் ரியோ.இவர் தொகுத்து வழங்கிய நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் உள்ளிட்ட தொடர்கள் ஹிட் அடித்தது.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக அசத்தி வந்தார் ரியோ.

இதனை தொடர்ந்து ரியோ ஹீரோவாக பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தை பாணா காத்தாடி,செம போத ஆகாத படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேசன் இயக்கியுள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.ரம்யா நம்பீசன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் தள்ளிப்போனது.

பாலசரவணன்,ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் சில வீடியோ பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வந்தன.இந்த படம் டிசம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த படத்தின் புதிய ரிலீஸ் டீஸர் நாளை வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

#PlanPanniPannanum Teaser coming your way at 6PM tomorrow! 😍🥳

Get ready for this fun-filled teaser! 🤩@rio_raj @nambessan_ramya @dirbadri @thisisysr @positiveprint_ @SinthanL @Rajeshnvc5Kumar #P3 pic.twitter.com/0XmemVwJHd

— Sony Music South (@SonyMusicSouth) December 21, 2021