கடந்த 2011-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான மயக்கம் என்ன படத்தின் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபத்யாய். சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உலகளவில் உள்ள ரசிகர்களை ஈர்த்தார். இவர் அமெரிக்காவில் எம்பிஏ படிப்பதற்காக சினிமாவில் இருந்து முற்றிலும் ஒதுங்கி விட்டார். குறைந்த அளவு படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கென ரசிகர்கள் ஏராளம்.
இவர் கல்லூரி படிக்கும் காலத்தில் ஜோ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமணம் சென்ற வருடம் இறுதியில் நடைபெற்றது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி அவர்களது திருமணம் நடந்து முடிந்தது. ரிச்சா தற்போது கணவருடன் அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியில் வசித்து வருகிறார். அங்கு தற்போது காட்டுத்தீ காரணமாக பெரிய சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அந்த பகுதியில் காற்றின் தரமும் குறைந்து இருக்கிறது. அதனால் மூச்சு விடவும் மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். போர்ட்லேண்ட் மேயர் அவசர நிலையை பிரகடன படுத்தியிருக்கிறார்.
நடிகை ரிச்சா இதன் காரணமாக வீட்டிலேயே தான் இருக்கிறார். காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அவர் வெளியில் செல்லாமல் இருக்கிறார். மேலும் வீட்டுக்கு உள்ளும் புகை அதிகம் வருகிறது என்பதால் மூச்சுவிடுவதில் அதிகம் சிரமம் ஏற்பட்டு இருக்கிறது என பதிவு செய்துள்ளார். இது பற்றி ட்விட்டர் பக்கத்தில், காற்றின் தரம் இங்கு மிக மோசமாக இருக்கிறது. புகை வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டது. அனைத்து இடங்களிலும் ஏர் பியூரிபையர்கள் விற்று தீர்ந்து விட்டன.
நாங்கள் வீட்டிலேயே மூச்சு விட முடியாத நிலையில் இருக்கிறோம். காற்று இல்லாமல் இந்த புகை காரணமாக வரும் தலைவலியுடன் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டிருக்கிறார். கொரோனா கால கட்டத்தில் அதிகமாக மாஸ்க் அணிந்திருந்த அவர் இந்த காட்டுத்தீ புகை காரணமாக வேறு விதமான மாஸ்க் ஒன்றை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது, நான் தற்போது வேறு விதமான மாஸ்க் அணிய வேண்டி இருக்கிறது. வெளியில் மிகவும் புகை மூட்டமாக இருக்கிறது. என்னுடைய ரெஸ்பிரேட்டரில் இருந்து என்னுடைய பெயிண்டிங் ப்ராஜெக்ட்டுக்கு பெயிண்ட் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு இருக்கிறது என கூறி இருக்கிறார். இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்திருக்கும் ரிச்சா மீண்டும் நடிக்க வருவாரா என தான் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்று தான் தெரிகிறது. ரிச்சா கடந்த டிசம்பரில் திருமணம் செய்து கொண்ட நிலையில் தங்களது முதல் திருமண நாளன்று வெளியில் செல்ல திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் தற்போது காட்டுத்தீ அதிகம் பரவி வருவதால் அந்த திட்டத்தை கைவிட வேண்டியது ஆகிவிட்டது என்றும் வேறொரு பதிவில் விளக்கியுள்ளார்.