XB பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர். இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத்தின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பி வருகிறது.
கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. விரைவில் இந்நிலையை கடந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி, தளபதியை பெரிய திரையில் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் வசனகர்த்தாவாக பணிபுரிந்துள்ள இயக்குனர் ரத்னகுமார், படம் குறித்த ருசிகர தகவலை தெரிவித்தார். கலாட்டா குழுவுடன் முகநூல் லைவ்வில் தோன்றிய ரத்னகுமார், படத்தின் இன்டர்வல் காட்சி பட்டையை கிளப்பும் என்று கூறியுள்ளார். வழக்கமாக விஜய் சார் படங்களில் இன்டர்வல் காட்சி மாஸாக இருக்கும். இதிலும் இன்டர்வலில் வரும் டயலாக் அப்படி இருக்கும் என்றார்.