தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான Ala vaikunthapuramuloo திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.பட்டிதொட்டி எங்கும் வசூல்மழை ஈட்டியது இந்த படம்.
இதனை தொடர்ந்து ரங்கஸ்தலம் பட இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் தயாராகி வரும் புஷ்பா படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கவுள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்திற்காக ஒரு புதிய பேச்சு வழக்கு வகையை ராஷ்மிகா கற்று வருகிறார் என்பதை நேற்று இன்ஸ்டாகிராமில் உறுதிப்படுத்தினார்.