முன்னணி தெலுங்கு நடிகர் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் கடைசியாக பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவான வக்கீல் சாப் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து இயக்குனர் க்ரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் ஹர ஹர வீர மல்லு படத்தில் தற்போது நடித்து வருகிறார் பவன் கல்யாண்.
முன்னதாக பவன் கல்யாண் நடித்துள்ள பீம்லா நாயக் திரைப்படம் வருகிற பிப்ரவரி 25 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. மறைந்த இயக்குனர் சச்சி இயக்கத்தில் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களான பிரித்திவிராஜ் மற்றும் பிஜூ மேனன் இணைந்து நடித்து, வெளிவந்து மெகா ஹிட்டான ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக பீம்லா நாயக் திரைப்படம் தயாராகியுள்ளது .
முன்னணி தெலுங்கு இயக்குனரான இயக்குனர் சாகர்.கே.சந்திரா இயக்கத்தில் உருவாகும் பீம்லா நாயக் படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, நடிகை நித்யா மேனன் & இயக்குனர் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .
இயக்குனர் த்ரிவிக்ரம் சீனிவாஸ் வசனங்களை எழுத, சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தமன்.S இசையமைத்துள்ளார் . ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, நவீன் நூலி படத்தொகுப்பு செய்துள்ளார். இந்நிலையில் பீம்லா நாயக் திரைப்படத்தின் பவர்ஃபுல்லான ட்ரைலர் தற்போது வெளியானது. அந்த ட்ரைலர் இதோ...