சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருபவர் ரம்யா சுப்ரமணியன்.விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளியினான இவர் அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் சங்கத்தலைவன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
ஓகே கண்மணி,கேம் ஓவர்,ஆடை உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்.மேலும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
கொரோனா காரணமாக அவ்வப்போது தனது ரசிகர்களுடன் லைவ்வில் பேசியும்,அவர்களுக்கு உடற்பயிற்சி குறித்தும் இவர் தனது சமூகவலைத்தளங்களில் பதிவு செய்வார்.அவ்வப்போது டிக்டாக் செய்தும் தனது
திறமையை வெளிப்படுத்தி வந்தார் ரம்யா.
இவரது டிக்டாக் விடீயோக்களும்,இன்ஸ்டாகிராம் போஸ்டுகளும் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன.இவர் போடும் விடீயோக்கள் இணையத்தில் ட்ரெண்ட் அடித்து வருகின்றன.உடற்பயிற்சி குறித்தும்,மேக்கப் குறித்தும் அவ்வப்போது விடீயோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி வருவார் ரம்யா.
இந்த லாக்டவுன் நேரத்தில் ஸ்ட்ரிக்ட் ஆக டயட் இருந்து உடம்பை குறைக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியுள்ளேன் என்று லாக்டவுனுக்கு முன்னால் எடுத்த புகைப்படங்களையும்,இப்போதுள்ள புகைப்படங்களையும் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார்.இந்த லாக்டவுன் நேரத்தில் 5 கிலோக்களை குறைந்துள்ளதாக அவர் பெருமையாக தெரிவித்துள்ளார்.இந்த போஸ்ட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இந்த போஸ்டை கீழே உள்ள லிங்கில் காணலாம்